
இந்த இணையத்தளம் சென்று அதில் உங்களுக்குப் பிடித்தமான இணைய தளத்தின் பெயரை டைப் செய்து என்டர் அடித்துப் பாருங்கள். அப்போது இதன் அருமையும் பயனும் தெரியும். அந்த இணைய தளத்தின் சிறிய போட்டோ காட்சி ஒன்று காட்டப்படும். ஆனால் அத்தோடு நிற்பதில்லை. அதன் கீழாகக் குறிப்பிடப்படும் இணைய தளத்தைப் பற்றிய வேறு சில குறிப்புகள் காணப்படும். இந்த இணைய தளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? யார் இதன் உரிமையாளர்? எந்த நிறுவனம் இதனை இணையத்தில் பதித்து தருகிறது? என்பன போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன. அத்துடன் இந்த பக்கத்தின் மேலாக ஏழு டேப்கள் தரப்பட்டுள்ளன.

Intro
இதன் கீழாக இணைய தளத்தின் பெயர், தொடர்புக்கு முகவரி தரப்படுகின்றன.
Popular
இந்த பிரிவில் இந்த தளம் மக்களிடையே எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளது என்ற தகவல் தரப்படுகிறது.
Traffic
இங்கு தளத்தைப் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் டிராபிக் எப்படி உள்ளது என்று காட்டப்படுகிறது.
People
இணைய தளத்தின் உரிமையாளர் யார்? யாரெல்லாம் இதற்கு அடிப்படைக் காரணமானவர்கள் என்று தெரிய வரும்.
Spotlight
இங்கே கிளிக் செய்தால் குறிப்பிட்ட இணைய தளம் குறித்து யாரேனும் பிளாக்குகள் எழுதி உள்ளனரா என்று காட்டப்படுகிறது.
Company
இணைய தளத்தைப் பதிந்து நிர்வாகம் செய்திடும் நிறுவனத்தின் தகவல்களை இந்த பிரிவின் கீழ் காணலாம்.
Technical
இந்த பிரிவில் இணைய தளம் இணைய உலகில் தொழில் நுட்ப ரீதியில் எங்கு அமைந்துள்ளது என்ற தகவல்களைத் தருகிறது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் ரசிகரா? உலகத்திலேயே அது போல ஒன்று இல்லை என்று எண்ணி வருகிறீர்களா? உடனே அதன் பெயரை Quarkbase சர்ச் இஞ்சினில் போட்டுப் பாருங்கள். சரியான தகவல்கள் கிடைக்கும்.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
1 கருத்துகள்
வலைப் பூங்கா இணையத்தளத்தில் நடந்த வாக்கெடுப்பில் உங்கள் வலைத்தளம் விருதை பெற்றுள்ளது
பதிலளிநீக்குhttp://valaipoongaa.blogspot.com/2009/10/blog-post.html