
பின் File , மெனு திறந்து கிடைக்கும் மெனுவில் Save As என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பைல் சேவ் செய்யப்படும் இடத்தில் பைலின் பெயர் தரும் விண்டோவிற்குக் கீழாக பைல் பார்மட்டின் பெயர்கள் வரிசையாகக் கிடைக்கும். இதில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திட கிளிக் செய்தால் புதிய பார்மட்டில் சேவ் செய்யப்படும். அநேகமாக அனைத்து பிக்சர் எடிட்டர்களும் இந்த வசதியைக் கொண்டிருக் கின்றன.
நீங்கள் பெரும்பாலும் கேள்விப்படாத புரோகிராம் ஒன்றினைச் சொல்லட்டுமா? இணைய தளத்தில் PIXresizer என்று ஒரு இலவச புரோகிராம் கிடைக்கிறது.
இதனை டவுண்லோட் செய்து இது போன்ற பிக்சர் பார்மட் மாற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். பார்மட் மாற்றம் மட்டுமின்றி படங்களின் அளவு களை மாற்றவும் இது உதவுகிறது. இவ்வாறு மாற்றப்படும் படங்கள் புதிய தனியான போல்டரில் பதியப்படுகின்றன. ஒரிஜினல் படங்கள் அப்படியே மாற்றம் எதுவும் இல்லாமல் காக்கப்படுகின்றன. படங்களை இமெயிலில் அனுப்பும்போதும், இணைய தளத்தில் பதித்திட திட்டமிடுகையிலும் அவற்றின் அளவுகளை நாம் சுருக்க வேண்டியதிருக்கும். படங்களின் தன்மை கெடாமல் இவற்றைச் சுருக்க இந்த புரோகிராம் உதவுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்