இவை எந்தவிதமான தொல்லையும் கொடுப்பதில்லை என்றே வைத்துக் கொண்டாலும், இவை ஏன் ஹார்ட் டிஸ்க்கில் இடம் பிடிக்க வேண்டும். எனவே இவற்றை மொத்தமாக, எந்த சுவடும் இல்லாமல் நீக்குவதற்கென ஏற்படுத்தப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் புரோகிராமின் பெயர் ரெவோ அன் இன்ஸ்டாலர். இதனை இன்ஸ்டால் செய்து, குறிப்பிட்ட சாப்ட்வேர் அல்லது புரோகிராம்களை நீக்குமாறு கட்டளை கொடுத்தால், எந்த விதமான தங்கும் வரிகள் இன்றி அனைத்தையும் நீக்கிவிடுகிறது.
இந்த புரோகிராமுடன் இன்னொரு வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் பெயர் ஆட்டோ ரன் மேனேஜர் (Autorun Manager) இது என்ன செய்கிறது? உங்களுடைய சிஸ்டம் தொடங்கும் போது, நீங்கள் கட்டளை கொடுக்காமல், தாங்களாக இயங்கிப் பின்னணியில் உள்ள புரோகிராம்களையும் இது பட்டியலிடும். ட்ரேக்ஸ் கிளீனர் (Tracks Cleaner) என்ற ஒரு புரோகிராமும் இதில் தரப்படுகிறது. இந்த புரோகிராம் நீங்கள் மேற்கொண்ட இணைய உலாவில் பார்த்த முகவரி களின் பதிவுகளையும் நீக்குகிறது. அத்துடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷன் புரோகிராம் விட்டுச் செல்லும் வரிகள், பைல்களையும் நீக்குகிறது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
3 கருத்துகள்
பகிர்வுக்கு நன்றி. நீண்ட நெடிய விளக்கம் அருமை. தொடர்க. வாழ்க வளமுடன்,
பதிலளிநீக்குடெக்ஷங்கர் @ TechShankar
Thanks for the Software
பதிலளிநீக்குவழக்கம்போல் நல்ல மிக பயனுள்ள தகவல்.தொடருங்கள்.....
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி.