
நீங்கள் டச் ஸ்கிரீன் பயன்படுத்தினால், எளிதாக பட்டன்களை அழுத்தி கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதே நேரத்தில் சற்று சிறிதான அளவில் உள்ள மானிட்டர்களை இயக்குபவர்களுக்கு இது சிரமத்தைத் தரும் அம்சமாக இருக்கும். டாஸ்க் பார் எடுத்துக் கொள்ளும் இடத்தை அப்ளிகேஷன்களுக்குத் தந்தால் விரைவாகச் செயல்படலாம் என்று பலர் ஏங்குவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதன் மூலம் டாஸ்க் பாரினைச் சற்றுச் சுருக்கிக் கொள்ளலாம்.
1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் Use small icons என்னும் பிரிவில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

இனி டாஸ்க் பார் சிறிய இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஏன், தேவையில்லாத போது இந்த டாஸ்க் பாரை மறைந்து கொள்ளும்படி செய்துவிடலாமே என்று உங்களில் பலர் நினைக்கலாம். தாராளமாக அவ்வாறும் செட் செய்திடலாம்.
இதற்கு மேலே 2ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள Taskbar and Start Menu Properties டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். இதில் டாஸ்க் பார் (Taskbar) என்னும் டேப் திறக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

உங்களுடைய செட்டிங்ஸ் சேவ் செய்யப்பட்டு, அவற்றில் அமைத்தபடி டாஸ்க் பார் இயங்கும். இனி உங்கள் அம்புக் குறியினை டாஸ்க் பாரிலிருந்து எடுத்துவிட்டால், டாஸ்க் பார் மறைந்துவிடும். அந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றால், டாஸ்க் பார் தோன்றும்.
0 கருத்துகள்