கூகிள் பஸ் (Buzz) : சிறு பார்வை + Blogger widget

ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டான். ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர்.

இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள்.

இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், Google Buzz தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.

பிளாக்கருக்கான கூகிள் பஸ் (Google Buzz) கருவிப்பட்டை

இதனை உங்கள் பிளாக்கில் நிறுவுவதற்கு கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும் .

1. முதலில் உங்கள் Dashboard இல் Layout -> Edit HTML க்கு செல்லவும் . (Tip:Tick box "Expand Widget Templates")

2.பின்னர் <data:post.body/> என்ற கோட்டை தேடி கண்டுபிடுக்கவும். அதற்கு கீழாக கீழே உள்ள கோட்களை சேர்க்கவும் .

<a expr:href='&quot;http://www.google.com/reader/link?url=&quot; + data:post.url + &quot;&amp;title=&quot; + data:post.title' target='_blank' title='Google'><img alt='Buzz This' onmouseout='this.src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBcZxR-SjWEFcTcZPtPQi_Xpxmm_Kfetn61YXEdnRDELcJUaLub2JtlxILn6JhyphenhyphenWBwsog2qgWhbSEc29IvD81AXr-tf9DYgOYnW7NRd6gs33E-fGFkz8CZuGSkWf6iy_OInSIKtHOW2zY3/s1600/g_buzz1.png&quot;' onmouseover='this.src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqhqAnm4a1eQq4je3lCcIdq9ftWGyzJlYHXQQN-eMAgJydZVxfnEKbVnM6TmIXWAHw6Uas73gDq1xffkvtKqwc6-QK6K5K7-FQNNxrkXKSb2cSCGmSbRKIxoDcZnZpJqeeLvJBuLH_3E0V/s1600/g_buzz7.png' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBcZxR-SjWEFcTcZPtPQi_Xpxmm_Kfetn61YXEdnRDELcJUaLub2JtlxILn6JhyphenhyphenWBwsog2qgWhbSEc29IvD81AXr-tf9DYgOYnW7NRd6gs33E-fGFkz8CZuGSkWf6iy_OInSIKtHOW2zY3/s1600/g_buzz1.png'/></a>


<a expr:href='&quot;http://www.google.com/reader/link?url=&quot; + data:post.url + &quot;&amp;title=&quot; + data:post.title' target='_blank' title='Google'><img alt='Buzz This' onmouseout='this.src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj28ym_avSOp0fcglLdPPFsGWlKnMnU7_Xt0nB8nLgCPExB8NlRZJ48SPS_2V0BMJzOg5j786wHy8-ZTiEe64on96DBAo8j8j_MDYhyphenhyphenjWqKxmH6r8TlBYc0IH4vCdnbzxcyOQfYt-uTAW5P/s1600/g_buzz4.png&quot;' onmouseover='this.src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqhqAnm4a1eQq4je3lCcIdq9ftWGyzJlYHXQQN-eMAgJydZVxfnEKbVnM6TmIXWAHw6Uas73gDq1xffkvtKqwc6-QK6K5K7-FQNNxrkXKSb2cSCGmSbRKIxoDcZnZpJqeeLvJBuLH_3E0V/s1600/g_buzz7.png' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj28ym_avSOp0fcglLdPPFsGWlKnMnU7_Xt0nB8nLgCPExB8NlRZJ48SPS_2V0BMJzOg5j786wHy8-ZTiEe64on96DBAo8j8j_MDYhyphenhyphenjWqKxmH6r8TlBYc0IH4vCdnbzxcyOQfYt-uTAW5P/s1600/g_buzz4.png'/></a>

3.அவ்வளவுதான் save செய்து வெளியேறவும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்