
லேப்டாப் வாங்காமல் அவசரப்பட்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விட்டீர்களா? லேப்டாப் இருந்தாலும் அதை மறந்து விட்டு வெளியே செல்கிறீர்களா? எதுவானாலும் இனி கவலையில்லை.
இருந்த இடத்தில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாக்களை தொடர்பு கொள்ளும் ஜி&டிரைவ் வசதியை கூகுள் விரைவில் அறிமுகம் செய்கிறது.
கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடிய இந்த வசதி பற்றி அமெரிக்க தொழில்நுட்ப செய்திக்கான வெப்சைட் கூறுகையில், ÔÔஉங்கள் கம்ப்யூட்டர் ஹார்டிரைவை தூக்கி எறியுங்கள். கூகுள் ஜி&டிரைவ் விரைவில் வருகிறதுÕÕ என்கிறது.
அதாவது, நமது கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் அத்தனை டேட்டாக்களையும் இன்டர்நெட்டில் கூகுள் ஏற்படுத்தித் தரும் இடத்திலும் ஸ்டோர் செய்து வைக்கலாம். அதன்மூலம், இருக்கும் இடத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும். ஜி&டிரைவ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியில் இமெயில், போட்டோக்கள், இசை, தகவல் பைல்கள் என சகலமானவற்றையும் தொடர்பு கொள்ள முடியும். கூகுள் இப்போது அளித்து வரும் வசதிகளுடன் கூடுதலாக இந்த சேவையும் கிடைக்கப் போகிறது.

எனினும், கூகுள் ஜி&டிரைவை நம்பி அதிகளவு தனிப்பட்ட மற்றும் வர்த்தக டேட்டாக்களை ஸ்டோர் செய்வது சரியாக இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் அளவு டேட்டாக்களுக்கு ஜி&டிரைவில் பாதுகாப்பு கிடைக்காது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி தொடர்பு கொண்டபோது கூகுள் தரப்பில் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.
4 கருத்துகள்
கொஞ்சம் விவகாரமான விஷயமாக இருக்கும் போல் இருக்கு!!
பதிலளிநீக்குகூகிள் காரனுங்க அட்டகாசம் அளவு கடந்து போய்ட்டிருக்கு! :)
பதிலளிநீக்குவந்த வரை லாபெமென்று இருக்க வேண்டியதுதான்.
good article. now gdrive-10gb free space available.but uploading is toooo slow..for 1 gb upload, 15 hrs..(even in broadband).
பதிலளிநீக்குpattaya killapurangaya vazhtukkal
பதிலளிநீக்கு