Blogger Trix: வலைப்பதிவுகளில் தேடுபொறி ( search engine ) உருவாக்குதல்.

பிளாக்கர் தரும் டெம்பிளேட் பயன்படுத்துபவர்கள் உங்கள் வலைப்பதிவுகளை ஒரு தேடுபொறியை உருவாக்கி கொள்ள முடியும். இதனால் உங்கள் வலைப்பதிவில் மட்டும் மற்றவர்கள் பதிவுகளை தேடி பெற செய்ய முடியும்.

1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுளைந்து Layout கிளிக்செய்யுங்கள்.

2.கீழுள்ள படத்தில் காட்டியவாறு Add a Page element கிளிக் செய்யுங்கள் .


3.பின்பு Add a Page element என்பதில் கீழே படத்தில் காட்டியவாறு HTML/JavaScript என்பதில் add to blog கிளிக் செய்யுங்கள்.

4.புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள கோட்களை சேருங்கள்.



<form id="searchThis" action="/search" style="display:inline;" method="get">
<input id="searchBox" name="q" size="20" type="text"/> <input id="searchButton" value="Search" type="submit"/>
</form>


5.
என்பதை கிளிக் செய்யுங்கள்.


பின்வருவனவற்றை உங்கள் தேவைக்கேற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.

Size="20" இதில் தேடுபொறியின் நீளத்தை மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக Size="30" என்று மாற்றலாம்.

value="search" இத்தனை தமிழில் value="தேடுக" என்று மாற்றிக்கொள்ளலாம்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்