சனிக்கிழமை கூகுள் கொடுத்த எச்சரிக்கையால் பல இணையதளங்கள் கூகுள் தேடியந்திரத்தில் திடீரென தெரியாமல் போயின. இதனால் இணையதளங்களை நடத்துவோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 3.25 மணிவரை, கூகுள் தேடி எந்திரத்தில் குறிப்பிட்ட தளங்களைத் தேடுவோர் பெரும் குழப்பத்துக்கு உள்ளானார்கள்.
காரணம் எந்த தளத்தைத் தேடித் திறந்தாலும், அந்த தளம் 'பெரும் ஆபத்தானது... வைரஸ் உள்ள தளம் (Warning! This site may harm your computer)' என்ற எச்சரிக்கையை கூகுள் அளிக்கவே, எதற்கு வம்பு என மூடிவிட்டனர் பயனாளர்கள்.
என்னதான் நடந்தது?
வழக்கமாக வைரஸ் மற்றும் ஆபத்து நிறைந்த வெப்சைட்டுகள் பற்றி கூகுளில் அப்டேட் செய்யும் ஒரு தளம் அளித்த தகவல்கள் தவறுதலாக ஏற்றப்பட்டு விட்டனவாம்.
இணைய தளங்களின் சுட்டியில் '/' என்ற குறியீடு கொண்ட அனைத்துத் தளங்களும் ஆபத்தானவை என்ற பொருள்படும்படி அப்டேட் செய்யப்பட்டு விட்டனவாம். ஆனால் இந்தக் குறியீடு அனைத்து தளத்துக்குமே பொதுவானது.
இந்தத் தவறு காரணமாகவே திடீரென அப்படி தோன்றியதாகவும், பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
நல்லா கிளப்புறீங்கப்பா பீதியை...:~
4 கருத்துகள்
தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குஅடப் பாவமே...
பதிலளிநீக்குthanx for the information
anbudan aruna
கூகிள் பரவால்ல ஆனா விண்டோஸ் சர்ச் ல இந்த கூத்து அடிக்கடி நடக்குது
பதிலளிநீக்குஉங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது
பதிலளிநீக்குhttp://youthful.vikatan.com/youth/bcorner.asp
வாழ்த்துக்கள்