ஆஸ்கர் விருதுகள் வென்றுள்ள ரஹ்மானின் வீட்டில் நேற்று விருந்து அளிக்கப்பட்டது. நண்பர்கள், திரையுலகப் பிரமுகர்கள், உறவினர்கள் உட்பட பலருக்கும் விருந்தளிக்கப்பட்டது.
"உலகமே எனது மகனை வாழ்த்துகிறது. அதற்கு அனைவரது அன்புதான் காரணம். அந்த அன்பிற்காகவே இந்த விருந்து" என்று கூறிய ரஹ்மானின் அம்மாம கரீமா பேகம், தன் கைப்படவே பிரியாணி சமைத்திருக்கிறார்.
தனது தயாரைப் போன்றே ஏ.ஆர். ரஹ்மானும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அன்பைப் பற்றி குறிப்பிட்டார்.
"அன்பு மற்றும் வெறுப்பை தேர்வு செய்யும் நிலையில் இருந்தேன். அப்போது அன்பைத்தான் தேர்வு செய்தேன். அன்பைத் தேர்வு செய்தால் எல்லாமே நன்றாக அமையும். அதுதான் எனக்கும் நடந்தது.
இந்து, முஸ்லிம், வட இந்தியன், தென்னிந்தியன் என்ற பாகுபாடுகள் நீங்கி நம்மிடையே ஒற்றுமை வரவேண்டும். அதையே இசையின் மூலம் நான் செய்ய முயன்றும் வருகிறேன்.
இந்த எனது விருது மூலம் இந்தியாவிற்கு ஆஸ்கர் கிடைக்க வழி பிறந்துள்ளது. இனி தமிழ் சினிமா கலைஞர்கள் ஆஸ்கரை தட்டிவரும் காலம் தூரமில்லை" என்று உணர்ச்சி ததும்ப குறிப்பிட்டார்.
ஏ.ஆர் .ரஹ்மானை வாழ்த்துவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

0 கருத்துகள்