பயர்பாக்ஸ் செஷன் ரீஸ்டோர் செய்வது எப்படி..!

பயர்பாக்ஸ் மூலம் பல தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பத்து தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. திடீரென பவர் கட் வந்து உங்கள் யு.பி.எஸ். பின் காலை வாரிவிட கம்ப்யூட்டர், இன்டர்நெட், அந்த பத்து தளங்கள் எல்லாம் அம்போ என்று உங்களிடமிருந்து டாட்டா காட்டிச் சென்று விடுகின்றன. பவர் போய்த்தான் இது நடக்கும் என்பதில்லை. நம் கம்ப்யூட்டர் சில வேளைகளில் கிராஷ் ஆனாலும் இது நடக்கும்.

மீண்டும் பவர் வரலாம், ஆனால் அந்த பத்து தளங்கள் கிடைக்குமா? ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ள அந்த தளங்களின் முகவரிகள் எங்கு கிடைக்கும்? இங்கு தான் இந்த அருமையான செஷன் ரெஸ்டோர் (Session Restore) வசதி நமக்கு உதவிடுகிறது.

நீங்கள் சிஸ்டம் கிராஷ் ஆகும் முன் பார்த்துக் கொண்டிருந்த தளங்களைத் திறந்து உங்களை அங்கு அமர வைக்கிறது. இந்த வசதியை செட் செய்திட கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.


1.முதலில் Tools, Options திறக்கவும்.

2.பின் Main டேப்பில் "When Firefox starts." என்பதற்குச் செல்லவும்.

3.பின் கிடைக்கும் கீழ் விரி மெனுவில் "Show my windows and tabs from last time" என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.



4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எனவே நம்பிக்கையுடன் பயர்பாக்ஸ் தொகுப்பை இனி நீங்கள் பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு வழியில் கிராஷ் ஆனால் மீண்டும் கம்ப்யூட்டர் இயங்கி பயர்பாக்ஸ் செயல்படத் தொடங்குகையில் நீங்கள் ஏற்கனவே பார்த்த செஷனைக் கொண்டு வரவா என வினா கிடைக்கும். யெஸ் என்றால் உடனே அந்த செஷன் அப்படியே கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்