நீங்கள் போனில் போட்டோ எடுக்கப்போறிங்களா? கீழே உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.போட்டோ எடுக்க முன் இவற்றை கவனியுங்கள்.
1. வெளிச்சப்படுத்துங்கள்
நீங்கள் போட்டோ எடுக்கும் உருவம் அல்லது இடத்தில் நல்ல வெளிச்சம் வேண்டும். எவ்வளவு வெளிச்சம் இருக்கிறதோ அதற்கேற்ற முறையில் போட்டோ சிறப்பாக அமையும். எனவே இயற்கையான சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் போட்டோ எடுக்கலாம். வீடுகளுக்குள்ளாக போட்டோ எடுப்பதாக இருந்தால் வெளிச்சம் பரவலாக பொருளின் மேல் இருக்க வேண்டும். பல கேமராக்களில் பில்ட் இன் பிளாஷ் உள்ளது. வெளியே வெளிச்சத்தில் போட்டோ எடுத்தாலும் இதனைப் பயன்படுத்தலாம்.
2. ஸூம் தவிர்க்கவும்
போட்டோ எடுக்கும் பொருள் அல்லது நபரின் அருகே சென்று எடுப்பதே நல்லது. ஸூம் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். ஸூம் போட்டு எடுத்தால் படங்கள் துல்லியமாகக் கிடைப்பது இல்லை. மேலும் அருகே நின்று எடுக்காவிட்டால் எடுக்கப்படும் பொருள் அல்லது நபர் ஒரு படத்தின் சிறிய உருவாக முக்கியத்துவம் இல்லாதவராகவே இருப்பார். கேமரா போனின் ரெசல்யூசன் குறைந்த அளவே இருப்பதால் வியூ பைண்டரின் முழு இடத்திலும் எடுக்கப்படும் நபர் இருப்பது நல்லது.
3. கேமரா ஷேக் கூடாது
போட்டோ எடுக்கையில் உங்கள் கைகளை எதன் மீதாவது அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கரங்கள் நடுங்குவதனையும் அதனால் போட்டோ ஷேக் ஆவதையும் தடுக்கும். வெளிச்சம் சற்றுக் குறைவாக இருக்கையில் ஷட்டர் திறந்து மூடுவது சிறிது நீடிக்கும். எனவே ஷட்டரை அழுத்தியபடி சிறிது நேரம் இருப்பது நல்லது.
4. படங்களை சேவ் செய்க
எடுக்கும் படங்களை கேமராவில் சேவ் செய்து வைக்கவும். அதற்கேற்ற வகையில் மெமரியை அதிகப்படுத்தி வைக்கவும். போட்டோ எடுத்த சில காலத்திற்குப் பின் அவற்றை மீண்டும் பார்த்து கம்ப்யூட்டருக்கு மாற்றவும். மோசமான படங்கள் என்று முதலில் எண்ணப்பட்டவை கம்ப்யூட்டரில் நன்றாகத் தெரியலாம்.
5. அதிகம் எடுக்கவும்
மொபைல் போன்களில் மெமரியை அதிகப் படுத்தலாம்; அப்படியே அதிகப்படுத்தா விட்டாலும் சேமிக்க அதிக இடம் இருக்கும். எனவே ஒரு குறிப்பிட்ட போட்டோவினை அருகே, சற்று தூரத்தில், வேறு கோணத்தில் என பல ஷாட்கள் எடுக்கவும். நீங்கள் எதிர்பார்க்காத கோணத்தில் ஷாட்கள் நன்றாக இருப்பது பின்னர் தெரியும். நன்றாக இல்லாததை எப்போது வேண்டுமானாலும் அழித்து விடலாமே. இதற்கு ஒரு பைசா கூட கூடுதலாகச் செலவாகப் போவதில்லை.
6. சம்பிரதாயங்களை உடையுங்கள்
போட்டோ எடுத்தால் பிரேமில் உருவத்தின் இரு பக்கமும் இடம் வேண்டும். மேலும் கீழும் இடம் வேண்டும் என்ற சம்பிரதாய ரூல்களை எல்லாம் உடையுங்கள். நீங்கள் உங்கள் கற்பனைக்கேற்ற வகையில் எடுத்துப் பாருங்கள். சில போட்டோக்கள் மிக வித்தியாசமான வகையில் சிறப்பாக அமைந்திருக்கும். அது பெருமை தானே.
7.லென்ஸ் சுத்தம்
லென்ஸ்களில் விரல் ரேகைகள் படுவது இயற்கையான ஒரு செயல். எனவே சிறியதாக இருந்தாலும் அதற்கேற்ற பிரஷ் அல்லது மெல்லிய துணி கொண்டு லென்ஸைச் சுத்தம் செய்திட வேண்டும்.
8.ரெசல்யூஷன் செட்டிங்
கேமரா ரெசல்யூசனை தேவைக்கேற்றபடி மாற்றலாம். சும்மா பொழுது போக்க போட்டோ எடுப்பதாக இருந்தால் ரெசல்யூசன் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. காலத்திற்கும் வைத்து திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தால் ரெசல்யூசனை அதிகப்படுத்தி எடுப்பது நல்லது. ரெசல்யூசன் அதிகமாக இருப்பின் போட்டோ பைலின் அளவு உயரும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும். 2 ஜிபி கார்ட் இருந்தால் அதிக ரெசல்யூசனில் 800 படங்கள் வரை பதிந்து வைக்கலாம்.

1 கருத்துகள்
அழகி கூட அதி வசதி கொண்டது....அழகி பற்றித் தெரியுமா? http://www.azhagi.com/ Try பண்ணிப் பாருங்களேன்...
பதிலளிநீக்குஅன்புடன் அருணா