ஆப்பிளின் சபாரி 4 - அதிவேக பிரவுசர்


உங்களில் எத்தனை பேர் மிக வேகமாக இயங்கும் பிரவுசரான சபாரி யைப் பயன்படுத்தி வருகிறீர்கள். ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பிரவுசருக்கான புதிய தொகுப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது சபாரி 4 பீட்டா என அழைக்கப்படுகிறது. நீங்கள் இதுவரை இந்த பிரவுசரைப் பயன்படுத்தவில்லை என்றால் இப்போது பயன்படுத்திப் பார்க்கலாம்.

முதலில் இந்த புதிய சபாரி தொகுப்பு மிக மிக பாஸ்ட். இதை இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்த்த போது மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் வேகமாக இணையப் பக்கங்கள் இறக்கப்படுவதனைப் பார்த்தேன். அதே போல தகவலுக்கான பக்கங்கள் விரைவில் கிடைத்தன. இந்த புதிய பதிப்பு மிக நன்றாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. டேப்கள் அனைத்தும் ஸ்கிரீனின் மேல் பக்கத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மெனு பார் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களைக் காண அதிக இடம் கிடைக்கிறது.


முற்றிலும் புதியதாக இரண்டு அம்சங்களைச் சொல்லலாம். அவை Cover Flow மற்றும் Top Sites ஆகும். டாப் சைட்ஸ் மூலம் பல இணைய தளங்களை ஒரு சேரப் பார்க்கலாம். இவற்றை முழுத் திரையில் பார்க்கும் வகையிலும் செட் செய்திடலாம்.கவர் ப்ளோ ஐ ட்யூன்ஸ் போல செயல்படுகிறது. ஒவ்வொரு வெப் சைட்டாகப் பார்வையிட இது அனுமதிக்கிறது. ஆனால் இந்த இரண்டு வசதிகளும் பழைய கம்ப்யூட்டரில் செயல்படவில்லை. மற்றபடி அனைத்து வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன. இதனை http://www.apple.com/safari என்ற முகவரியிலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்