![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_8j1RAc_KaYzkFGwZSHRvTy3Jem_rpyQPTCLBF1LwWTJEWgfskWN7x4j8biX1ixBs8x_HvFsk0Yve0p91-6uyknj9TIYAQT2XkP7cOxPKwxnEg7uaQDcW3vahdTuo-aZpxz-HqFjNrVDs/s200/feat_img_bluetooth_large.jpg)
நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbEb_dtThUvjfA7dDv9widrkY4liygWQ5k8rgvh83fiAAdzfkHS_mop33a5XXzTdzqafeaKIGOiJdozasTW4f64FwyyDXKUTBGXnaPexn8uaR5iWsNudthB_8plPGYhxnyHrajCKwUPMKf/s400/Bluetooth_rings_lg.jpg)
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:
அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlSM6rrMxWlLUbAttlRqkALXSgtmV89-HFxJvp9O8CniHx8oecdjNschioJPCV5ZUWa7l7vKFC_eAK07Wr8TKrhK0H7TR_6FM_7AEaqu25ccNalWLHqVBfj9ZEXxwTKSrm5YVH59Ql5U50/s400/bluetooth.jpg)
உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.
புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii2mnpf_Yo3V2lZ67kNHIf95N5ox89iq_WdER_Kfg8ZJ890a99nPvCB0-cdRvD4oDIbAAhwC-dt35g-qw2X3cmGLRONNTVe0d95tT0Fdj67u2Y0YDTIOVb0zGidTSs0HrVMZKRd0YDFyTm/s320/bt.jpg)
9 கருத்துகள்
பயனுள்ள தகவல் நன்றி
பதிலளிநீக்குகார்திக்,
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள தகவல்
நன்றி
இன்றுதான் என்னுடைய முதல் பின்னூட்டத்தை உங்களுக்கு தருகிறேன் ஆனால் வெகுநாட்களாக உங்கள் பதிவை பார்வையிடுகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ள கணினி தகவல்களை தருகின்றீர்கள். மீண்டும் நன்றி கார்த்திக்
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குமொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு ப்ளூ டூத் மூலம் பாட்டு எப்படி அனுப்புவது சொல்லிக் கொடுங்களேன்....
பதிலளிநீக்குஅன்புடன் அருணா
கார்த்திக்,
பதிலளிநீக்குஇந்த பதிவு http://youthful.vikatan.com/youth/bcorner - இல் இடம் பெற்றுள்ளது.
விவேக்.
உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது
பதிலளிநீக்குஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
Thanks Nanbaaa....
பதிலளிநீக்குKeep it up.....
மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறீகள். உங்கள் சேவை தொடரட்டும். நஜீப்
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஉங்கள் செய்திகள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.
www.dailypcnews.blogspot.com