ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திடுகையில் திடீரென நாம் எதிர்பாராத எர்ரர் மெசேஜ் ஒன்று கிடைக்கும். அது –– "You must have Administrator rights to install (insert program name) on this computer. Please log in to an account with Administrator rights and run this installation again." என இருக்கலாம். இப்படி ஒரு செய்தி கிடைத்தால் நம்மை திருடன் என்றா இந்த கம்ப்யூட்டர் எண்ணிக் கொண்டிருக்கிறது என்று கூட நீங்கள் எண்ணலாம்.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை அட்மினிஸ்ட்ரேட்டர் என்பவரே அந்த கம்ப்யூட்டரின் முழு உரிமையாளர். அவருக்கு மட்டுமே கம்ப்யூட்டர் ஒன்றில் எந்த இடத்திற்கும் சென்று வரும் உரிமை உண்டு. அவர் மட்டுமே ஒரு பைலை உருவாக்க முடியும். போல்டர் ஒன்றில் உள்ள பைலைத் திருத்தவும் அழிக்கவும் மாற்றவும் அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அந்த உரிமை தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக உங்களுடைய வீட்டில் நீங்கள் தான் அட்மினிஸ்ட்ரேட்டர். உங்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளும் அங்கு இயங்கலாம். ஆனால் அவர்கள் அந்த வீட்டில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் எதனையும் மேற்கொள்ள முடியும்.
அதே போல நீங்கள் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையிலோ அல்லது ஏற்கனவே இருக்கும் புரோகிராமின் செட்டிங்ஸை மாற்ற முயற்சிக்கையிலோ கம்ப்யூட்டர் நீங்கள் அதன் அட்மினிஸ்ட்ரேட்டராக உள்ளே வந்திருக்கிறீர்களா என்று சோதனை செய்திடும். எனவே அப்படி ஒரு சோதனையில் உங்களை யார் என்று கேள்வி வந்தால் அடடா அத்தனையும் வீணா என்று கலங்க வேண்டாம்.
சாதாரணமாக நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கினால் இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் குறித்து எதனையும் பார்த்திருக்க மாட்டீர்கள். நீங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லை என்பதற்காக அது போன்ற ஒன்று இல்லை என்று எண்ணக் கூடாது. பொதுவாக அவ்வகை அக்கவுண்ட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அங்கு செல்ல விரும்பினால் நீங்கள் செல்லும் வழியில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் இதற்கான சிறந்த வழி கம்ப்யூட்டரை Safe Modeல் இயக்குவதுதான். இதற்கு கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். பூட் ஆகிக் கொண்டிருக்கையில் எப் 8 கீயினை அழுத்துங்கள். அடுத்து திரையில் நீங்கள் தேர்ந்தெடுக்க பல ஆப்ஷன்கள் கிடைக்கும். அதில் Safe Mode என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்து என்டர் கீயை தட்டினால் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் திரையில் கிடைக்கப்பெற்று லாக் இன் டயலாக் தரப்படும். உங்கள் பாஸ்வேர்டினை இதில் டைப் செய்தால் நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராகக் கம்ப்யூட்டருக்குள் நுழையலாம்.
அட்மினிஸ்ட்ரேட்டராக நுழைந்தவுடன் மை கம்ப்யூட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின் அதில் Manage என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்துLocal Users and Groups என்ற போல்டரைத் திறக்கவும். பின் Groups என்பதில் கிளிக் செய்து அதன் பின் Administrators என்பதில் இரு முறை கிளிக் செய்திடவும். பின்னர் Add என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமையைத் தர விரும்பும் உங்களின் ரெகுலர் அக்கவுண்ட் பெயரைத் தரவும். எனவே இதனைச் சரியாக டைப் செய்து என்டர் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
இனி மறுபடியும் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவும். இப்போது உங்களுடைய ரெகுலர் அக்கவுண்ட் வழியாக நுழையவும். இந்த அக்கவுண்ட்டிற்கு ஏற்கனவே உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமையைத் தந்து விட்டதால் இனி நீங்கள் இன்ஸ்டால் செய்திட விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்.
ஒரு வேளை நீங்கள் ரெகுலர் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டினை மறந்துவிட்டிருந்தால் என்ன செய்வது? என்ற சந்தேகம் எழுகிறதா? இந்த சந்தேகம் எழுவது இயற்கையே. ஏனென்றால் நாம் அடிக்கடி அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தாததால் பாஸ்வேர்ட் மறந்து போக வாய்ப்புண்டு. அந்த வேளையில் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.
மீண்டும் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்திடவும். சேப் மோடில் வந்தவுடன் Start, Run சென்று "control userpasswords2 என டைப் செய்திடவும். ஒரு புது விண்டோ ஒன்று திறக்கப்படும்.
இதில் உங்களுடைய பாஸ்வேர்ட்கள் அனைத்தும் காணப்படும். இங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினை ஹைலைட் செய்திடவும். பின்னர் Reset Password ல் அழுத்தவும். கிடைக்கும் விண்டோக்களில் New Password மற்றும் Confirm New Password ஆகியவற்றைப் பார்க்கவும். இவை இரண்டிலும் புதிய பாஸ்வேர்டினை அமைக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். உங்கள் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டிருக்கும். மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடவும். உங்கள் அக்கவுண்ட்டில் புதிய பாஸ்வேர்ட் மூலம் உள்ளே அட்மினிஸ்ட் ரேட்டராகச் சென்று புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்.
1 கருத்துகள்
good posting... Keep it up...
பதிலளிநீக்கு