ஈ-மெயில் இணைப்பை (Attach File) இலகுவாக தரவேற்றுவது எப்படி..?

மெயில்களில் பைல்களை அட்டாச் செய்கையில் அனைத்து பிரவுசர்களும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் பிரவுஸ் செய்து பின் க்ஸ்புளோரர் போல விண்டோவினைத் திறந்து பைல்களைக் காட்டி அதிலிருந்து அட்டாச் செய்திட வேண்டிய பைல்களை ஒவ்வொன்றா இணைக்கச் செய்கின்றன.

இந்த சுற்று வேலைகளுக்குப் பதிலாக பைல் இருக்கும் டைரக்டரியைத் திறந்து பைலை அப்படியே அட்டாச் விண்டோவில் இழுத்துப் போடும் வசதியை ஜிமெயிலில் மேற்கொள்ளலாம். இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனென்றால் இந்த வசதியைத் தருவது ஒரு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பாகும்.

நீங்கள் பிரவுஸ் செய்வதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரையும் மெயில் அனுப்ப ஜிமெயிலையும் பயன்படுத்துபவராக இருந்தால் இதனைப் படியுங்கள். இங்கு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றைக் காண இருக்கிறீர்கள். இதன் பெயர் "dragdropupload" இதன் மூலம் ஜிமெயில் பயன்பாட்டில் புதிய அனுபவம் ஒன்றை நீங்கள் பெறலாம்.

வழக்கமாக இமெயில் ஒன்றுடன் பைலை அட்டாச் செய்திட "Attach a file"கிளிக் செய்து பின் அந்த பைல் உள்ள டைரக்டரியில் அத்தனை பைல்களையும் பார்த்து நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறீர்கள் இல்லையா? அதற்குப் பதிலாக இந்த ஆட் ஆன் தொகுப்பை இறக்கிப் பதிந்து கொண்டால் எத்தனை பைல்களை வேண்டுமானாலும் இறக்கி அட்டாச் விண்டோவில் இழுத்துப் போட்டுவிட்டு பின்னர் செய்தியைத் தயார் செய்து அனுப்பலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பை addons.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. How exactly do you or those that use this phrase mean by: Sharing is Sexy.
    In other words please explain what you imply by the word ''Sexy'' in this context.
    I am sure an oriental mind cannot visualize the exact meaning as intended by a western ''English'' focussed mind.

    As for example, Alister Campbell of Dr David Kelly's Murder is supposed to have ''sexed up'' a report and made it possible for Tony Blair to convince the British public that ''war with Iraq'' is a must.

    Does this coincide with the American term ''souped up'' please ?

    தங்களது வெப்சைட் மிகவும் பிரயோசனமானது ---
    நீங்கள் தந்துள்ள விஷயங்கள் சகலதுமே இன்டர்நெட்
    பாவிப்போருக்கு அத்தியாவசியமானவை ---
    இன்று சொற்ப நேரம் முன்னர் தான் உங்களது url
    கிடைத்தது ---
    அதற்குள் எனது ஆர்வம் அளவிட முடியாத உச்சத்தில்
    உள்ளது ---
    தொடருங்கள் - உங்கள் பணி பலருக்கு நன்மை வழங்கும் !

    பதிலளிநீக்கு
  2. How exactly do you or those that use this phrase mean by: Sharing is Sexy.