இது எல்லா வலைப்பதிவர்களுக்கும் உள்ள பிரச்சனை.எப்படி தங்கள் வலைப்பூ அல்லது இணையத்தளத்தினை விரைவாக லோட் ஆக வைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் மேலும் படிக்கவும். பொதுவாக இணையதளம் அல்லது வலைப்பூவின் அளவை (elements or images) குறைத்தாலே விரைவாக தரவிரக்கும்படி செய்துவிடலாம்.
கடந்தவாரம் எனக்கு Web Page Analyzar எனும் ஒரு இணைய சேவையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. இந்த வலைத்தளத்தில் நம்முடைய வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும் ஐந்தே செக்கன்களில் வலைத்தளத்தை ஆராய்ந்து (analyse) எவ்வளவு நேரத்தில் தரவிரக்கப்படுகிறது என்பதை தெரிவித்துவிடும்.
அதுமட்டுமில்லாமல் analyse செய்த பின் நமக்கு ஒரு ரிப்போர்ட் கிடைக்கும் . அதில் நமது வலைப்பூவின் மொத்த அளவு , எவ்வளவு படங்கள் உள்ளன , அவற்றின் அளவு , Html Code களின் அளவு ( Total Size, Images, HTML, CSS, Script etc.) என்பன தரப்பட்டிருக்கும். நாம் எந்தெந்த விடயங்களில் கவனம் செலுத்தினால் வலைத்தளத்தை விரைவாக லோட் ஆக வைக்கலாம் என்பனவும் குறிக்கப்பட்டிருக்கும்.
இலவசமாக கிடைக்கும் இந்த சேவையை நீங்களும் ஒருமுறை பயன்படுத்தி பாருங்களேன்.
இதுதான் அந்த தளத்தின் முகவரி : www.websiteoptimization.com
2 கருத்துகள்
மிகவும் பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்குபதிவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ள தகவல்.