கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?


உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது? நிச்சயம் நான் வந்துவிட்டேன் என்று இப்போதெல்லாம் வைரஸ் பைல் அறிவிப்பு வருவதில்லை.

ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.


சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம். வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.


2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.


3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.


4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.


5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா? வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.


7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

முதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.

கருத்துரையிடுக

5 கருத்துகள்

  1. மிக்க நன்றி.தெளிவான அழகான நடை,தெளிவான விளக்கம்.இந்த இடுகை நான் படிக்க வில்லை.பொதுவான உங்களின் அணுகுமுறை பற்றி எழுத நினைத்தேன். கண்டிப்பாக நீங்கள் பொறியாளர் என்பதனால் இந்த இடுகைகை விட கண்டிப்பாக நிறைய அறிந்திருப்பிர்கள். ஆனால் எல்லோருக்கும் விளங்க வைப்பதற்க்காக இரங்கி வந்து இருக்கிறிர்கள் எனநினைக்கிறேன்.very glad to see your writings
    jeevaflora

    பதிலளிநீக்கு
  2. Dear Sir
    1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.
    2.வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல்.
    This two problem i have.I installed Avast home edition anti virus.this Anti virus showing there is no virus.but also i have that problem. please tell how to rectify those problem(any free spyware software or anything) .
    thxs in advance.

    பதிலளிநீக்கு
  3. @ Anonymous

    எனக்கும் அதே பிரச்சனை ஏற்ப்பட்டது.
    Since Avast has lot of features, this leads to a problem.
    It had 6 providers running, In this Web provider scans all internet traffic. So if you stop that provider, the problem should be solved. Also u can stop the providers that u do not need.( Like messenger etc., ) your internet speed will be restored.
    But finally I changed to Avira free, which has simple interface and only had features that I need. It has better deduction rates and antispyware / Antiphising features in its latest free version. Also it does not use more system resources.

    கார்த்திக் Please comment on my views. Sorry I have written my comment as a small blog.

    பதிலளிநீக்கு
  4. soory i am computer not tamil fornt i don no how to tamil writing you no howto tamil writing ok my yahoo address this rsathiy92@yahoo.com please can i help me ok how to stting you sent my yahoo ok thanks

    பதிலளிநீக்கு