IE5 IE6 IE7 IE8 ஆகியவற்றை ஒரே விண்டோவில் இயங்கக் செய்தல்.


தனித்தனி பதிப்புக்களில் வெளியாகியுள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5,6,7,8 ஆகிய நான்கையும் எவ்வாறு ஒரே விண்டோவில் இயக்க முடியும் ? IETester ன்ற மென்பொருள் இந்த வேலையை செய்கிறது.

விண்டோஸ்
விஸ்டா அல்லது எக்ஸ்பியில் இயங்கக்கூடிய இந்த
மென்பொருள் நான்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புக்களையும் ஒரே விண்டோவில் இயங்க செய்கிறது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 5 அல்லது 6 இல் நாம் சிலதளங்களை பார்வையிடும்போது தளங்கள் தெளிவாக தெரியாது அல்லது கிராஷ் ஆகி விண்டோ மூடிவிடும்.சில வேளைகளில் தரவிறக்குவதற்கு நீண்ட நேரம் எடுக்கலாம். இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் இவற்றை தவிர்க்கலாம். காரணம் அந்த தளங்களை நீங்கள் விரும்பிய பதிப்புக்களில் பார்வையிடலாம்.


சிலர்
புதிய IE பதிப்புக்களை பயன்படுத்த தெரியாமல் இருப்பார்.அல்லது பழைய பதிப்பையே வைத்திருப்போரும் உள்ளனர் .அவர்களும் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டு விரும்பிய பதிப்புக்களை பாவனை செய்ய முடியும். இந்த மென்பொருளின் மொத்த அளவு வெறும் 24Mb மட்டுமே.

இந்த மென்பொருளை நேரடியாக இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளலாம்.
அல்லது இந்த தளத்துக்கு சென்றும் தரவிறக்கி கொள்ளலாம்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்