இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருட்டுத் தனமாக காப்பி எடுத்து பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்பு எது எனக் கேட்டால் சற்றும் சிந்திக்காமல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு எனக் கூறிவிடலாம். உலக அளவில் பல நாடுகளில் இந்த தொகுப்பு தான் நகலெடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இது சட்ட ரீதியாகப் பல பிரச்னைகளைத் தரும் என்றாலும் சில அலுவலகங்களில் கூட திருட்டுத் தனமாக இதனைப் பயன்படுத்தும் பழக்கம் பரவி வருகிறது.
சட்டப் பிரச்னைகளைக் காட்டிலும் நாம் நகல் தொகுப்புகளைப் பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் இதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்காது. இலவச அப்டேட் தொகுப்புகள் கிடைக்காது.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து பயன்களையும் தரும் இலவச ஆபீஸ் தொகுப்புகள் பல இருக்கும் போது ஏன் நாம் இது போல திருட்டு தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். ஒன்றல்ல பல ஆபீஸ் தொகுப்புகள் நாம் பயன்படுத்த இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.
1. லோட்டஸ் சிம்பனி
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தொடக்க காலத்திலேயே தன் தடம் பதித்த ஐ.பி.எம். நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இடத்தினைக் காலி செய்திட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றுதான் லோட்டஸ் சிம்பனி என்ற சாப்ட்வேர் தொகுப்பாகும். இதில் ஒரு வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் பிரசன்டேஷன் சாப்ட்வேர் ஆகியன இணைந்து தரப்பட்டுள்ளன. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இலவசமாய் இறக்கிக் கொள்ள கீழே முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
இந்த இலவச சாப்ட்வேர் தொகுப்பு எந்தவித பிரச்சினையும் இன்றி சிறப்பாக இயங்குகிறது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து தொகுப்புகளுடன் இணைந்து இயங்குகிறது. அதாவது ஆபீஸ் தொகுப்பில் உருவான அனைத்து பைல்களையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதில் பயன்படுத்தி மீண்டும் எம்.எஸ். ஆபீஸ் பார்மட்டில் சேவ் செய்து அந்த பைலை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் மீண்டும் பயன்படுத்தலாம்.
இந்த லோட்டஸ் சிம்பனி தொகுப்பில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. அது இதன் டவுண்லோடிங் நேரம் தான். பொதுவாக எந்த ஆபீஸ் தொகுப்பும் சற்று ஹெவியாகத் தான் இருக்கும். அதே போல இந்த தொகுப்பும் உள்ளது.
இந்தியாவில் பொதுவாக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பயன்படும் விதத்தை வைத்துப் பார்க்கையில் இதனை டவுண்லோட் செய்திட மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். ஆனால் நம் மக்கள் திரைப்படங்களையே மணிக் கணக்கில் டவுண்லோட் செய்வதால் இது போன்ற சாப்ட்வேர் தொகுப்பு களையும் டவுண்லோட் செய்திடலாம். எந்தவிதச் சட்ட சிக்கல் இன்றி சுதந்திரமாக ஒரு தொகுப்பினைப் பயன்படுத்த இன்டர்நெட் கட்டணம் செலுத்துவதில் தவறில்லை.
ஒருமுறை டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் இது ஒரு அதிகப் பயனுள்ள புரோகிராம் என்பதனை உணரலாம். மேலும் இதன் பைல்கள் ஓப்பன் டாகுமெண்ட் பார்மட்டில் இருப்பதால் இந்த பைல்களை எந்த வரையறையும் கட்டுப்படுத்தாது. எனவே அனைத்து வகைகளிலும் சுதந்திரமாய் இயங்க இந்த சாப்ட்வேர் தொகுப்பு வழி வகுக்கிறது.
2. ஓப்பன் ஆபீஸ்
எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வழி வகுக்கும் இன்னொரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு. இதுவும் இலவசமே. www.openoffice.org என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இதே தொகுப்பினை சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் வெப்சைட்டிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
இந்த தொகுப்பும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு தொகுப்புகளிலும் மாற்றி மாற்றி பைல்களை செயல்படுத்தலாம். அது மட்டுமின்றி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ், லினக்ஸ், சோலாரிஸ், மேக் ஓ.எஸ். எக்ஸ், ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இது இயங்குகிறது. ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மொழிகளில் இது கிடைக்கிறது.
நீங்கள் சாப்ட்வேர் புரோகிராமராக இருந்தால் இந்த தொகுப்பின் சோர்ஸ் கோட் பெற்று நீங்களும் இதனை மேம்படுத்த கோடிங் வழங்கலாம். இந்த தொகுப்பின் பெரும்பான்மையான வடிவமைப்பு சி ப்ளஸ் ப்ளஸ் மொழியில் அமைக்கப்பட்டுள்ளது.
3. ஸ்டார் ஆபீஸ்
இந்த தொகுப்பு இலவசமல்ல. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் விலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவுதான். ரூ.5,000க்கும் குறைவான விலையில் இது சன் மைக்ரோ சிஸ்டத்தால் விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் இது முற்றிலும் இலவசமாக சிடிக்களில் பதிந்து வழங்கப்பட்டது. அந்த பழைய தொகுப்புகள் இருந்தால் இப்போதும் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தொகுப்பு +2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
கட்டணம் செலுத்தி இதனைப் பெற விரும்புபவர்கள் செல்ல வேண்டிய தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்
இங்கு சென்றபின் 69.95 டாலர் பணம் செலுத்தினால் இந்த தொகுப்பினை டவுண்லோட் செய்து கொள்ளலாம். வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன், டிராயிங், டேட்டா பேஸ் பயன்பாடு ஆகியவற்றில் பெரிய அளவில் வசதிகளைக் கொண்டு இந்த தொகுப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் இணைந்து செயல்படுகிறது.
4. கூகுள் டாக்ஸ்
வேர்ட் ப்ராசசிங் அல்லது ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்களில் இயங்க இப்போதெல்லாம் பெரிய அளவிலான ஆபீஸ் தொகுப்புகளைப் பதிந்து இயக்க வேண்டியதில்லை. இணைய வெளியில் இந்த ஆபீஸ் தொகுப்புகளை கூகுள் டாக்ஸ் என கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதுவும் கூட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியானது என்று கூறலாம். ஒருமுறை இதனைப் பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட் ஷீட்கள் அல்லது பிரசன்டேஷன் பைல்களை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிலும் பயன்படுத்தலாம்.
மேலும் கூகுள் டாக்ஸ் மூலம் உருவாக்கப்படும் பைல்கள் பாதுகாப்பாக சர்வரிலும் சேவ் செய்து வைக்கலாம். இதனால் எந்த வித வைரஸ் தாக்குதலும் இருக்காது. மேலும் ஆன்லைனில் சேவ் செய்து வைப்பதால் குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் தான் பைல் உள்ளது. அங்கு சென்று பைலை எடுக்க வேண்டும் என்ப தெல்லாம் இல்லை. எந்த ஊரி லும் சென்று இணைய இணைப் பின் மூலம் கூகுள் சர்வர் இணைப்பு பெற்று உங்கள் பைல்களை நீங் கள் கையாளலாம். தொடர்ந்து இணைய பயன்பாடு அதிகரித்து வருவதாலும், அதற்கான கட்டணம் குறைந்து வருவ தாலும் இனிமேல் கூகுள் டாக்ஸ் போன்ற ஆபீஸ் தொகுப் புகளின் பயன்பாடுதான் அனை வராலும் விரும்பப்படும் என்றுரைக் கலாம்.
5. திங்க் ப்ரீ
இலவசமாய்க் கிடைக்கும் ஒன்னொரு ஆபீஸ் புரோகிராம் திங்க் ப்ரீ (ThinkFree) இதனைப் பெற இந்த முகவரியில்உள்ள தளத்தை அணுகவும்.
இந்த தொகுப்பு உங்கள் பைல்களை ஸ்டோர் செய்து வைக்க 1 ஜிபி இலவச இடம் வழங்குகிறது.இந்த தொகுப்பைப் பயன்படுத்த இதன் வெப்சைட் சென்று பதிந்து கொள்ள வேண்டும். அதன்பின் கூகுள் டாக்ஸ் தளம் தருவது போல ஆன்லைனில் இந்த ஆபீஸ் தொகுப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இதன் ஒரு சிறப்பு இதன் இன்டர்பேஸ் அனைத்தும் (ஐகான், மெனு, செயல்பாடு) எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ளது போலவே உள்ளன.
6. ஸோஹோ – ஒர்க் ஆன்லைன்
ஆன்லைனில் கிடைக்கும் இலவச ஆபீஸ் சாப்ட்வேர் தொகுப்புகளில் மிகச் சிறந்தது இதுதான் என்று இதனைப் பயன்படுத்துபவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். அதிகம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது இந்த தொகுப்பு. எந்த பார்மட்டிலும் ஆபீஸ் டாகுமெண்ட் பைல்களை இதில் கொண்டு வந்து இயக்கலாம்.
இதிலும் உருவாக்கலாம். கூகுள் டாக்ஸ் போலவே இதில் பதிந்து இயங்க வேண்டும்.
இந்த தளத்தின் முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
இன்னும் இது போல பல ஆபீஸ் தொகுப்புகள் இணைய வெளியில் கிடைக் கின்றன. பல சாப்ட்வேர் வல்லுநர்கள் ஆபீஸ் தொகுப்பு உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இடத்தைத் தகர்க்கும் எண்ணத்துடனும், மக்களுக்கு இலவசமாய் இந்த சமாச்சாரங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உழைக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
Abi Word, Jarte Word Processor, Yeah Write for Windows, Gnome Office, NeoOffice, neoOffice/J மற்றும் Koffice ஆகியவை இந்த வகையில் வெளியாகி இணைய வெளியில் கிடைக்கின்றன. இவை அனைத்தும் விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில்லை. மேக், லினக்ஸ் இயக்கத்தில் இயங்குபவையும் இந்த பட்டியலில் உள்ளன. இவற்றை சர்ச் இஞ்சினில் தேடி அதன் தளம் சென்று பார்த்து இவற்றையும் டவுண்லோட் செய்து இயக்கித்தான் பாருங்களேன்.
7 கருத்துகள்
அருமை கார்த்திக்... அட்டகாசமான பதிவு...
பதிலளிநீக்குநல்ல தகவல்கள்... நிச்சயம் பலருக்கும் உபயோகப்படும்
:-*
பதிலளிநீக்குஅருமையான தகவல். நன்றி.http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/5.gif
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு
பதிலளிநீக்குGreat!
பதிலளிநீக்குyou are a superman to gather all the information and present them so simply in iniya tamizh!
kudos to you brother!
My heart felt wishes to you to continue this.
Anand
great compile.. Thanks.
பதிலளிநீக்குதங்களது பதிவுகள் அனைத்தும் எனக்கு helpful ஆ இருக்கு.
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களது சேவை.
Thanks.
kumarasamy