
* டவுண்லோட் மேனேஜர்
இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுண்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக் கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது. இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம் களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ் களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றனர். 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
* ஒர்பிட் டவுன்லோடர்
இதில் டவுண் லோட் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராமினைப் பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர் பைல்களை உருவாக்குவது, யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய் வது, இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின் றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந் தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவயான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
2.உங்கள் இஷ்டத்திற்கு ஷார்ட் கட் கீ
கம்ப்யூட்டர் வந்ததிலிருந்து நேரம் மிச்சம் செய்வதற்கும், குறைந்த உழைப்பிற்கும் பல வழிகளை நாம் பெற்று வருகிறோம். அந்த வகையில் கீ போர்டு ஷார்ட் கட் கீகளை அந்த அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களே தந்து வருகின்றன. எம்.எஸ். ஆபீஸ் மற்றும் பிரவுசர்கள் அனைத்திற்கும் ஹாட் கீகள் உள்ளன.
இருப்பினும் நம் வசதிக்கு நாம் விரும்பும் வகையில் இந்த ஆட்டோ ஹாட் கீகள் அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், விரும்புகிறோம். அந்த வகையில் நமக்கு உதவிட கிடைப்பது Auto Hotkey என்னும் அப்ளிகேஷன் புரோகிராம். இதன் மூலம் எந்த கீ இணைப்புகளிலும் நீங்கள் விரும்பும்செயல்பாட்டினை அமைத்துப் பயன்படுத்தலாம். அத்துடன் இந்த புரோகிராம் உங்கள் கீ போர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டினை பதிவு செய்து அவற்றை நீங்கள் விரும்பும் எத்தனை முறையும் சுருக்கமாகச் செயல்படுத்த உதவிடுகிறது.

ஆட்டோ ஹாட் கீ புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறக்க ஆட்டோ ஹாட் கீகளை உருவாக்கலாம். எடுத்துக் காட்டாக Windows + W இணைந்து எம்.எஸ்.வேர்டைத் திறக்குமாறு செய்திடலாம். இப்படியே பல புரோகிராம்களுக்கான ஹாட் கீகளை அமைக்கலாம். ஆனால் இந்த புரோகிராமின் முழு பயனை அடைய இதன் ஸ்கிரிப்டிங் மொழியை புரிந்து கொள்வது நல்லது. இதற்கான வழிகாட்டியும் இந்த தளத்தில் உள்ளது. நீங்கள் உருவாக்கும் ஹாட் கீகளை எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Compile script என்பதில் கிளிக் செய்தால் அது ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாகும். இந்த பைலை எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
இவை அனைத்தும் புதிய கம்ப்யூட்டரில் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு உதவிடும். Exit கொடுத்தால் இவற்றிலிருந்து வெளியேறலாம். புதிய அந்த கம்ப்யூட்டரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
இதே போன்ற இன்னொரு புரோகிராம் உள்ளது. ஆனாலும் ஆட்டோ ஹாட் கீ போல அனைத்து வசதிகளையும் தரும் வேறு புரோகிராம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.
தரவிறக்கம் செய்ய : கிளிக் செய்யவும்
3.இலவச டிவி புரோகிராம்
இன்டர்நெட் இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் (மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிக மிக அதிகம்தான்) பலரும் இதன் மூலம் அனைத்து வசதிகளையும் பெற எண்ணுகின்றனர். அவ்வகையில் டிவி மற்றும் திரைப்படங்களையும் பார்க்க துடிக்கின்றனர். உங்களிடம் மத்திய நிலை வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தால் இது சாத்தியமே. இந்த வகையில் நமக்கு உதவிடுவது Joost என்னும் புரோகிராம் ஆகும்.

இது தரும் சேனல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அசந்து போவீர்கள். மொத்தம் 480 சேனல்களைத் தருகிறது. இதனை வகை வகையாகப் பிரித்தும் பார்க்கலாம். காமெடி, கார்ட்டூன், டாகுமெண்டரி என வகைகளும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் உங்களுக்குப் பிடித்த படக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.
இந்த Joost புரோகிராமின் சிறப்பு நாம் கேட்பதை வழங்குவதுதான். நாம் விரும்புவதை நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தருகிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை மூடிவிடலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்னை உள்ளது. விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவை தரும் நிதி பலத்தில் தான் இந்த இலவச டிவி புரோகிராம் இயங்குகிறது. அதனால் என்ன! இங்கு நாம் கேபிளுக்குப் பணம் கட்டிப் பார்க்கையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. எனவே குறுக்கிடும் விளம்பரங்களுக்குப் பழகிய நமக்கு Joost தரும் விளம்பரங்கள் ஒரு பொருட்டே அல்ல. இதே போல இன்னொரு தளம் இதுவரை எனக்குத் தென்படவில்லை.
தள முகவரி :இங்கே கிளிக் செய்யவும்
4.சிடிக்களில் எழுத
நம்முடைய கம்ப்யூட்டர்களில் சிடி மற்றும் டிவிடி ரைட்டர்களை நிறுவுகையில் அதனுடன் வரும் நீரோ சிடி ரைட்டிங் புரோகிராமுடன் பழகிப் போன நமக்கு அதே போல மற்ற புரோகிராம்கள் குறித்து எண்ணுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீரோ போலவே, அதன் வசதிகளுக்கு இணையான வசதிகளைத் தரும் இலவச புரோகிராம்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சிடி மற்றும் டிவிடிக்களில் தகவல்களை எழுத CD Burner XP என்றொரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. சிடி, டிவிடி மற்றும் புளுரே டிஸ்க்குகளில் நீரோ போலவே அனைத்து வகை தகவல்களையும் எழுதுகிறது. ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை சிடிக்களில் அமைத்துத் தருகிறது. ஆடியோ சிடிக்களை உருவாக்குகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
5. உங்கள் கம்ப்யூட்டரைத் தூக்கிச் செல்ல
நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது. அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும்.

இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.
இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே ே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன.மேலே தரப்பட்டுள்ள மென்பொருட்களை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தரவிறக்கி கொள்ளுங்கள்.
4 கருத்துகள்
ரொம்ப நல்லா இருக்கு. பயனுள்ள இடுகை...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
Any possible to view Tamil channels
பதிலளிநீக்குthere are lot of icons in my desktop tray. How can i remove those icons permanently without affecting software?
பதிலளிநீக்கு@ Ms.Mike
பதிலளிநீக்குWith Windows Vista or Xp, you can hide these icons to remove clutter. This guide will show you how to do this.
1. Right click the space next to the clock and select properties.
2. In Taskbar and Start Menu Properties, select the Notification Area tab and then select customize
3. Now select the icons you want to hide and choose hide.
4. Press OK on both windows you just opened and you are done.