
Diet and Weight Loss Tips
உணவு முறைக்கும் எடைக் குறைப்பிற்குமாக உருப்படியான டிப்ஸ்களை இந்தப் பிரிவில் காணலாம். ஒவ்வொரு டிப்ஸும் வெவ்வேறு பழக்கம் குறித்து தகவல்களை அளிக்கின்றன. அத்துடன் அந்த பொருள் குறித்த கட்டுரை ஒன்றுக்கு உங்களை வழி நடத்துகின்றன.
Tutorial
இந்த தளத்தில் உங்கள் உணவுப் பழக்கம் குறித்த முழுமையான தகவல்கள் தரப்படுகின்றன. உணவுக் கட்டுப்பாடு பழக்கம் குறித்து உண்மைத் தகவல்களைக் கூறி உங்களை இயல்பாக இருக்கச் சொல்லி அழைக்கிறது.
Calories Burned Calculator
இங்கு ஐந்து வகையான கால்குலேட்டர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உங்கள் உடம்பின் சக்தி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதனை அறியலாம். ஒவ்வொரு கால்குலேட்டர்களின் கீழாகவும் அதன் தொடர்பான ஒரு கட்டுரை தரப்பட்டுள்ளது. அதில் அந்த கால்குலேட்டர் கையாளும் பொருள் குறித்துத் தெளிவான கருத்துக்களும் செயல்முறைகளும் தரப்பட்டுள்ளன.

இந்த கால்குலேட்டர் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவினால் உடம்பில் சேரும் சக்தி கலோரிகளில் தரப்படுகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் வகைகள் மற்றும் உறைய வைத்து பின் சூடாக்கிச் சாப்பிடும் வகைகள் குறித்த தகவல்கள் நமக்கு மிகவும் உபயோகமானவை.
Weight Loss Calculator
இந்த பிரிவில் உள்ள கால்குலேட்டர் எடையைக் குறைப்பதில் உங்கள் இலக்கு மற்றும் எடையைக் குறைப்பதற்கான கால அட்டவணையைத் தயாரித்து அளிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் இழக்கும் எடை மற்றும் அதனை ஈடுகட்ட நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டுகிறது.
Weights & Measures Converter
உடம்பின் எடை, உயரம் மற்றும் உணவின் அளவுகளை பழைய முறையிலிருந்து புதிய மெட்ரிக் முறைக்கு மாறுவதற்குத் தேவையான வசதியைத் தருகிறது.நமக்கு இது தேவையில்லை. ஏனென்றால் நாம் மெட்ரிக் முறையான கிலோ மற்றும் மீட்டர் அளவினைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.
Weight Loss Forums
இங்கு உங்களைப் போல உடல் குறைவதற்கு முயற்சிகளை எடுக்கும் நபர்கள் சார்ந்த குழுக்களைச் சந்திக்கலாம். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை இவர்களுடன் பகிர்ந்து கொண்டு அனுபவத்தின் அடிப்படையில் கிடைக்கும் பதில்களைப் பெறலாம். நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ விருப்பமா! தினந்தோறும் இந்த இணைய தளம் சென்று தேவையானதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்