
முதலில் இந்த திட்டத்திற்கு பீனிக்ஸ் (Phoenix) என்று பெயரிட்டனர். இந்த பெயர் பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பெயருடன் பிரச்சினை ஏற்பட்டதால் பயர்பேர்ட் (Firebird) எனப் பெயரிட்டனர். இதற்கும் பயர்பேர்ட் டேட்டா பேஸ் சாப்ட்வேரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இதற்குப் பதிலளிக்கையில் பிரவுசரின் பெயர் மொஸில்லா பயர்பேர்ட் என்றுதான் எப்போதும் இருக்கும் என்று மொஸில்லாவின் சார்பில் எடுத்துச் சொல்லப்பட்டது. இதனால் பயர்பேர்ட் சாப்ட்வேர் தொகுப்புடன் பிரச்சினை இருக்காது என்று விவாதிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து வற்புறுத்தல்களும் ஆட்சேபணைகளும் வந்ததனால் மொஸில்லா பயர்பேர்ட், மொஸில்லா பயர்பாக்ஸ் என மாற்றப்பட்டது. இதுவே எளிமையாக பயர்பாக்ஸ் என அழைக்கப்பட்டது. மொஸில்லா இதனைச் சுருக்கமாக அழைக்கையில் Fx அல்லது fx என அழைக்கப்பட வேண்டும் என விரும்பியது. ஆனால் சுருக்கமாக இதனை FF என அழைப்பதே வழக்கமாகிவிட்டது.

பரயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பிரபலமான பிரவுசர் என்ற பெயரை பயர்பாக்ஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இயங்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் பல புதிய வசதிகள் இருந்தாலும் அவை ஒன்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இல்லை என்பதே பலரின் கணிப்பு. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ரசிகர்களுக்குப் பழக்கமான InPrivate மற்றும் குரோம் பிரவுசர் தரும் Incognito ஆகிய Private Browsing வசதியினை பயர்பாக்ஸ் 3.5 தாங்கி வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 2008 முதல் பீட்டா தொகுப்பினைப் பெற்று பயன்படுத்திய 8 லட்சம் பேர் இந்த வசதியினை அனுபவித்தனர். இப்போது பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பு 3.5ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் இந்த பிரவுசர் மூலமாகப் பார்த்த தளங்கள் குறித்த குறிப்புகள், அந்த தளங்களில் நாம் தந்த நம் பெர்சனல் தகவல்கள் ஆகியவை பதியப்பட மாட்டாது. இதனால் நாம் பார்த்த தளங்களின் பட்டியல் யாருக்கும் கிடைக்காது. எனவே பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் மற்றவர் அறியாமல் நம் பிரவுசிங் வேலையை மேற்கொள்ளலாம். இந்த வகை பிரவுசிங் போது புக்மார்க்குகளை அமைக்கலாம். பிரவுசரை மூடும்போது இவை புக் மார்க் பட்டியலில் ஏற்றப்படும்.
இந்த புதிய பதிப்பில் ஜியோ லொகேட்டிங் என்னும் வசதியும் உள்ளது. இதனால் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து இயக்குகிறீர்கள் என்பதனை பிரவுசர் உணர்ந்து கொள்ளும். பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் அதனை இயக்கும் போது அப்போது இயங்கிக் கொண்டிருந்த அனைத்து டேப்களும் திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு அவை அனைத்தும் திறக்கப்படும். ஆனால் தற்போது அதிலும் எந்த டேப்கள் திறக்கப்பட விரும்புகிறோமோ அவற்றை மட்டும் திறக்கலாம். மேலும் கிராஷ் ஆகும்போது ஏதேனும் வெப் படிவத்தில் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருந்தாலும் அந்த டெக்ஸ்ட்டும் மீண்டும் தரப்படும்.

இந்த பதிப்பின் வேகம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். சன் ஸ்பைடர் ஜாவா ஸ்கிரிப்ட் பெஞ்ச் மார்க் என்னும் சோதனை மூலம் இதனைச் சோதித்த போது இது பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப் பிரவுசிங் பழக்கத்திற்கு வந்த நாள் முதல் பிரவுசர்கள் அனைத்தும் தங்கள் டேப் பாரில் ஏதாவது முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிப்பில் சபாரி பிரவுசரில் உள்ளது போல டேப்களை அதன் வரிசையை மாற்றி அமைக்கலாம். இழுத்து நீக்கலாம். ஒரு டேப்பை இழுத்து புதிய விண்டோ ஒன்றில் அமைக்கலாம்.
பயர்பாக்ஸ் பதிப்பு இப்போது தமிழ் உட்பட 70க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் சில மொழிகளிலும் இதனைத் தர வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்யார் பாக்ஸின் அனைத்து தொகுப்புக்களையும் இதுவரை உலகெங்குமுள்ள ஒரு பில்லியன் மக்கள் தரவிறக்கம் செய்த்துள்ளனர். இதனை சமிபத்தில் மொஸில்லா நிறுவனத்தினர் கொண்டாடினார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை கேளே உள்ள இணைய முகவரியில் அறிந்தது கொள்ளலாம்.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
2 கருத்துகள்
dfgdfgdfgdfg
பதிலளிநீக்குSuperb post. Keep it up!
பதிலளிநீக்கு