
இலவச வெப் மெயில் சேவை வழங்கும் யாகூ, கூகில் போன்ற நிறுவனங்களின் இணைய தளங்களூடாக மின்னஞ்சல் முகவரியொன்றை உருவாக்கும் போது நம்மைப் பற்றிய விவரங்ளையும் கேட்கிறர்ர்கள். அங்கு ஓரிடத்தில் அர்தமற்ற ஓர் ஆங்கிலச் சொலலை இமேஜ் போமட்டில் தோன்றச் செய்வார்கள. அல்லது வலைப்பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது இத்தனை காண்பிப்பார்கள்.
அந்தச் சொல்லில் காணப்படும் எழுத்துக்களை அவதானித்து அதன் கீழுள்ள டெக்ஸ்ட் பொக்ஸில் டைப் செய்யச் சொல்வார்கள். இதனை Word Verification (சொல் சரிபார்ப்பு) என்பார்கள். எதற்கு இந்த நடை முறை? உங்கள் கண் பார்வையை சோதிக்கிறார்களா? அதுதான் இல்லை. இது இலவச இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே.

இலவசமாக வழங்கும் சேவையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த பாதுகாப்பு ஒழுங்கு. ஒரு மனிதரால் மட்டுமே இமேஜ் போமட்டிலுள்ள எழுத்துக்களைக் கண்டறிந்து டைப் செய்ய முடியும். இதன் காரணமாக தன்னியக்க ஸ்பாம் மெயில்களையும் கருத்துக்களையும் தவிர்க்க முடியும் என்பதனாலேயே அந்த எழுத்துக்களை டெக்ஸ்ட் போமட்டில் அல்லாமல் இமேஜ் போமட்டில் தோன்றச் செய்கிற்ர்ர்கள்.
4 கருத்துகள்
good.
பதிலளிநீக்குநல்ல கருத்து
பதிலளிநீக்குநான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்
இப்பொழுது imageல் இருக்கும் எழுத்துக்களை textல் மாத்துவதற்கு கூட மென்பொருட்கள் இருக்கின்றன.(this program is coded in matlab) எனவே spam செய்ய நினைத்தால் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றது.
பதிலளிநீக்குHi KARTHIK Really nice website man. Superb.
பதிலளிநீக்குAnd very Informative.