உங்கள் கணனிக்கு தேவையான சில அத்தியாவசிய மென்பொருட்கள்

சிக்கலைத் தீர்த்து கம்ப்யூட்டரை அதிகபட்ச அதன் திறனுடன் இயங்க வைக்கும் வகையில் பல புரோகிராம்கள் இருந்தாலும் அவற்றில் சில முக்கியமான இலவசமான புரோகிராம்களை இங்கு காணலாம். அது இது என்று ஏகப்பட்ட வசதிகள் தரும் சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன், இவற்றினூடே வரும் ட்ரோஜன் வைரஸ்கள், விளம்பரங்கள், துண்டு துண்டாய்ப் பைல்களை வாங்கிக் கொள்வதால் சிதறிய நிலையில் ஹார்ட் டிஸ்க் என இந்த சூழ்நிலைகளில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் அது இயங்க வேண்டிய அனைத்து திறனுடன் இயங்குமா என்பது சந்தேகமே!

நமக்கு உதவும் பல சாப்ட்வேர் தொகுப்புகள் நம்மை குஷிப் படுத்தினாலும் கம்ப்யூட்டருக்கு சிரமத்தை கொடுக்கும் என்பது உறுதியான ஒரு அனுபவமே. இந்தச் சிக்கலைத் தீர்த்து கம்ப்யூட்டரை அதிகபட்ச அதன் திறனுடன் இயங்க வைக்கும் வகையில் பல புரோகிராம்கள் இருந்தாலும் அவற்றில் சில முக்கியமான இலவசமான புரோகிராம்களை இங்கு காணலாம்.

1. வைரஸ் தடுப்பு

அவாஸ்ட் (Avast) எனப்படும் சாப்ட்வேர் அனைத்து கம்ப்யூட்டருக்கும் பயன்படும் இலவச சாப்ட்வேர் தொகுப்புகளில் முதன்மையானதாகும். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பயன்படுத்துபவருக்கே தெரியாமல் உள்ளே புகுந்து நாசம் செய்திடும் வைரஸைக் காட்டிலும் வேறு எது எதிரியாக இருக்க முடியும். அடிக்கடி தன்னை மேம்படுத்திக் கொண்டு இலவச சேவை வழங்கும் சாப்ட்வேர் தொகுப்புகளில் அவாஸ்ட் முதலிடம் பிடித்துள்ளது.

இதிலேயே ஒரு .எம். ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர் மற்றும் பிடுபி ஷீல்ட் (P2P shield) உள்ளது. இத்துடன் நல்ல தரமான பைல் ஸ்கேனரும் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் தொடந்து தினந்தோறும் அப்கிரேட் செய்யப்படுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. விளம்பர தடுப்பு

வைரஸ்கள் திருடர்களைப் போல் செயல்பட்டு நமக்கு எரிச்சலைத் தருவதாக இருக்கும்போது நம் தலையைப் பிய்த்துக் கொள்ளும் வகையில் இடைஞ்சல் தருவது ஸ்பைவேர் புரோகிராம்களே. இணையத்தில் இந்த ஸ்பைவேர்களை கம்ப்யூட்டருக்குள் நுழைய விடாமல் செய்திடும் பணியைப் பல சாப்வேர் புரோகிராம்கள் செய்தாலும் சர்ச் அண்ட் டெஸ்ட்ராய் (S&D Search and Destroy) சாப்ட்வேர் இந்த வகையில் நல்லதொரு திறமையாகச் செயல்படும் புரோகிராமாக இயங்குகிறது.

ஸ்பை வேர் புரோகிராம்களைத் தேடி அழிப்பதாக இருப்பது மட்டுமின்றி இது இயக்கப்பட்ட நிலையில் இருக்கையில் இத்தகைய புரோகிராம்கள் கம்ப்யூட்டர் உள்ளே நுழைவதனைத் தடுக்கும் கேடயமாகவும் செயல்படுகிறது. குறிப்பாக விளம்பரங்களாக வரும் ஸ்பைவேர்களை இது முனைந்து செயல்பட்டு தடுத்து நிறுத்துகிறது. குடும்பங்களில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் பல அசிங்கமான படங்களுடன் வரும் புரோகிராம்களை அண்டவிடாது காக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3. குப்பை அகற்றி

வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களைப் பெரும் அளவில் தடுத்துவிட்டாலும் நம்மால் தடுக்க இயலாத ஒன்று உண்டென்றால் அது விண்டோஸ் இயக்கத் தொகுப்பினால் வருவதுதான். விண்டோஸ் இயக்கத்தில் புரோகிராம்கள் பலவற்றை இன்ஸ்டால் செய்வதினாலும் அன் இன்ஸ்டால் செய்வதினாலும் பல பைல்கள் அப்படியே கம்ப்யூட்டரில் சேர்ந்துவிடுகின்றன. குறிப்பாக ரிஜிஸ்ட்ரியில் அப்படியே இருக்கின்றன. இதனால் கம்ப்யூட்டர் தன் சுய பலத்தை இழந்து அதன் திறனுக்குக் குறைவாகவே இயங்குகிறது.

இந்தச் சிக்கலை எப்படி தீர்க்கலாம்? இதற்கெனவே சி கிளீனர் (CCleaner) அல்லது கிராப் கிளீனர் (Crap Cleaner) என்ற புரோகிராம்கள் இருக்கின்றன. இந்த புரோகிராமினை இயக்குகையில் நாம் பயன்படுத்தாத புரோகிராம்களின் சிஸ்டம் பைல்களை நீக்குகிறது. அத்துடன் இன்டர்நெட் பயன்பாட்டிற்கான டெம்பரரி டைரக்டரியில் உள்ள பைல்களையும் நீக்குகிறது. ரிஜிஸ்ட்ரியை ஸ்கேன் செய்து அதில் உள்ள தேவையற்ற வரிகளையும் நீக்குகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4.சிதறலைச் சேர்த்தல்

விண்டோஸ் இயக்கம் நாள் செல்லச் செல்ல மிகவும் மெதுவாக இயங்குவதற்கு முக்கிய காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல் ஒன்று அங்கும் இங்குமாய் எழுதப்படுவதுதான். அங்கும் இங்கும் இருப்பதால் இந்த பைல்களைத் தேடி எடுத்துப் படித்து இயங்க விண்டோஸ் இயக்கத்தொகுப்பிற்கு வழக்கமான நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் தேவையாய் உள்ளது. இப்படி உருவாகும் துண்டுகளை எப்படி பிரித்து ஒரே இடத்தில் அடுக்குவது? அந்த வேலையைத்தான் டிபிராக் (Defrag) என்கிறோம். இந்த வேலையைச் செய்திடும் புரோகிராம்களை டிபிராக்கர் என அழைக்கிறார்கள். இந்த வகையில் சிறப்பான புரோகிராம் O&O Defragger எனப்படும் புரோகிராம் ஆகும். இலவசமாகக் கிடைக்கும் ந்த புரோகிராம் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலுடன் இணைந்து இயங்குகிறது. இந்த புரோகிராமை நாமே மேனுவலாகவும் இயக்கலாம்.

எங்கே எந்த அளவில் ஹார்ட் டிஸ்க்கில் இடம் சிதறியுள்ளது என்று அறிந்து இயக்கலாம். மேலும் சிதறிய கிளஸ்டர்கள் (பைல்கள் எழுதப்படும் சிறிய துண்டுகள்) வித்தியாசமான வண்ணங்களில் காட்டப்படுகின்றன. இதில் உள்ள கிளஸ்டர் இன்ஸ்பெக்டர் கிளஸ்டர்களில் உள்ளவற்றையும் பைல்கள் எப்படி துண்டு துண்டாய்ப் பதியப்பட்டுள்ளன என்றும் காட்டுகிறது.

5. டெஸ்க்டாப் சர்ச்

இன்றைய கம்ப்யூட்டர்களில் உள்ள திறம்படச் செயல்படும் புரோகிராம்களில் டெஸ்க்டாப் சர்ச் சேவை செய்திடும் புரோகிராமும் ஒன்றாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு பைலைத் தேடித் தருவது மட்டுமின்றி அதற்கும் அப்பால் சில சொற்களின் அடிப்படையில் பைல்களைத் தோண்டி எடுத்துக் கண்டுபிடித்துத் தரும் பணியையும் செய்கின்றன. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் காலக் கடிகாரத்தினையும் பராமரித்து எது எப்போது நடந்தது என்று காட்டுகிறது. இது போன்ற தேடுதல் பணி என்றாலே இப்போதைக்குச் சிறந்தது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவது குகூள் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

கூகுள் டெஸ்க்டாப் சாதனம் பல்வேறு வகையான தேடுதல் பணிகளைமேற்கொள்கிறது. பைல்கள் மட்டுமின்றி ஆபீஸ் டாகுமெண்ட்களை வரிசைப்படுத்துகிறது. நீங்கள் இணையத்தில் உலா வந்த செயல்பாடுகளை டாகுமெண்ட் செய்து காட்டுகிறது. தற்போதைய இதன் பதிப்பில் (பதிப்பு 5) கூகுள் டெஸ்க்டாப் அதன் ஆன்லைன் சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. இணைய வழி செயல்படுவதால் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஓராண்டுக்கு முன் உருவாக்கிய பைல்களைக் கூட இணையத்தில் இணைந்திருக்கும்போது கண்டறிந்து எடுக்கலாமே!

தரவிறக்கம் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

6 கருத்துகள்