ஒரு போல்டரைப் போல மற்றொரு போல்டரை அமைப்பது எப்படி ?

விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களையும் அமைக்க எண்ணுகிறீர்கள். அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம், பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது.

அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணினால் மேலும் சில கிளிக்குகளை ஏற்படுத்த வேண்டும். அவற்றை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.

முதலில் ஏதேனும் ஒரு போல்டரைத் திறக்கவும். "View" என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்குப் பிடித்த வியூவினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின் டூல்ஸ் மெனு சென்று Folder Options என்பதில் கிளிக் செய்து Folder Options டயலாக் பாக்ஸ் திறக்கவும்.

இங்கே Folder Options டயலாக் பாக்ஸில் வியூ டேப்பில் கிளிக் செய்திடுங்கள். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக உள்ள Apply to all folders என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.
இப்போது நீங்கள் மேற்கொண்ட மாற்றம் குறித்து உறுதி செய்திட "Set all the folders on your computer to match the current folders view settings (except for toolbars and folder task)? Change will occur the next time you open them" என்ற மெசேஜ் காட்டப்படும். ஓகே கிளிக் செய்து வெளி யேறவும்.

இப்போது நீங்கள் எந்த வியூவில் அமைத்தீர்களோ அந்த வியூவில் அனைத்து போல்டர்களும் காட்சி அளிக்கும். இப்போதும் கூட குறிப்பிட்ட ஒரு போல்டரை நீங்கள் விரும் பும் தோற்றத்தில் பார்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்