
அதே போல பல சுருக்குச் சொற்கள் (Abbreviations) உள்ளன. அவை எதற்கான சுருக்கம் என்றும் உடனே தெரியவராது. இவற்றைப் பட்டியலிட்டுத் தருவதெற்கென்று ஓர் இணைய தளம் உள்ளது. இந்த தளத்தின் மேலேயே ஒரு தேடுதல் தளம் தரப்பட்டுள்ளது. இதில் நமக்கு என்ன தெரியவேண்டுமோ அதனை டைப் செய்திட்டால் போதும். அது உடனே அதற்கான என்ட்ரி இருக்கும் இடத்தில் கொண்டு போய்விட்டுவிடும். இதைப் போல இன்னும் சில தேடல் வகைகள் உள்ளன.
Linked Alphabet : இதில் தரப்பட்டுள்ள எழுத்தில் கிளிக் செய்தால் உடனே அந்த எழுத்தில் உள்ள சுருக்குச் சொற்கள் அனைத்தும் கிடைக்கும்.
Categories: இதில் எந்த சப்ஜெக்ட் குறித்த சுருக்குச் சொல்லுக்கு விளக்கம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

Computing, Business, Internet, Governmental, Academic & Science, Community, Miscellaneous, Regional, Medical, மற்றும் International தளத்தின் முகப்பு பக்கத்தில் இன்னும் இரண்டு இண்டரஸ்டிங் விஷயங்கள் உள்ளன. பிரபலமான கேள்விகள் (Most Popular Queries) என ஒரு பிரிவு. அடுத்ததாக Did You Know That என்று ஒரு பிரிவு. அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு மற்றும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தரும் பிரிவு. தங்களின் பொது அறிவினை விருத்தி செய்திட விரும்பும் ஒவ்வொருவரும் அடிக்கடி செல்ல வேண்டிய தளம் இது.
தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்
1 கருத்துகள்
நல்ல ஒரு தகவல் ...பகிர்விக்கு நன்றி ...
பதிலளிநீக்கு