
அண்மையில் பேஸ்புக் அதன் தளத்தில் ஒரு அப்ளிகேஷன் பைலை பதிந்து பயன்படுத்த அனுமதி தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தினால், கூகுள் இயக்கும் ஆர்குட் தளத்திலிருந்து, காண்டாக்ட் தகவல்கள் அனைத்தையும் எளிதாகக் கொண்டு வரலாம். குறிப்பாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களிலும் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், இதைப் பார்த்தால் தங்களுடைய அக்கவுண்ட் டேட்டாவினை பேஸ்புக்கிற்குக் கொண்டு போக எண்ணுவார்கள். இதன் மூலம் பேஸ்புக்கின் ஆன் லைன் ஜனத்தொகை உயரும். இந்த வகையில் இந்தியாவில் ஆர்குட், பேஸ்புக் தளத்திலிருந்து சரியான ஆபத்தைத்தான் சந்தித்துள்ளதாக, ஆன்லைன் விஷயங்களில் ஆய்வு நடத்துபவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் பேஸ்புக்கைப் பொருத்தவரை, இது அதன் பலத்தைக் காட்டும் முயற்சியாகும். ஆகஸ்ட்டில் மட்டும் இதன் ஜனத்தொகை பத்து லட்சம் உயர்ந்தது. ஆனால் ஆர்குட் ஜனத்தொகை 20 லட்சம் குறைந்தது. இப்படியிருக்க புதிதாய் பேஸ்புக் தரும் அப்ளிகேஷன் இன்னும் பலரை, அத்தளத்திற்கு மாற்றிக் கொள்ள தூண்டுதலாய் இருக்கிறது.
0 கருத்துகள்