உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.
கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு பயர்வால் ஒன்று எப்போதும் அவசியமாகும். பொதுவாக நாம் அனைவரும் விண்டோஸ் சிஸ்டம் தொகுப்புடன் வரும் பயர்வால் தொகுப்பினையே பயன்படுத்துகிறோம். ஏனென்றால் இது இலவசமாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இணைத்துத் தரப்படுகிறது. இது நல்லது தான். ஆனால் குறைந்த பட்ச பாதுகாப்பினையே விண்டோஸ் பயர்வால் தருகிறது. தற்போது மற்ற பயர்வால் தொகுப்புகளில் கிடைக்கும், நவீன பாதுகாப்பு வசதிகளை இது தருவதில்லை. ஒவ்வொரு பைலையும் முழுமையாக ஸ்கேன் செய்திடும் வசதி இதில் இல்லை. மேலும் நம்பிக்கைக்குகந்த நெட்வொர்க் கம்யூனிகேஷன் செட் செய்திடும் வசதியும், மைக்ரோசாப்ட் தரும் பயர்வால் தொகுப்பில் இல்லை.
இந்த கூடுதல் வசதிகளுடன் ஒரு பயர்வால் தொகுப்பு நமக்கு இணையத்தில் கிடைக்கிறது. அதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இது Comodo Firewall Pro என அழைக்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் புதிய விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இது இணைந்து செயல்படுகிறது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2 கருத்துகள்
இது அவாஸ்ட் உடன் இணந்து செயல் படுமா?
பதிலளிநீக்குPrasad,
பதிலளிநீக்குI have using Comodo with Avast working fine.
Other security products are
Spybot S&D - Spyware
Threatfire - HIPS protection
All are working parallel without conflicting issues.
I am using Windows 7