இதில் நுழைந்தவுடன் இந்த தளம் தரும் இலவச மற்றும் கட்டண சேவை விரிவாகக் காட்டப்படுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முதலில் இதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால், அதனையே யூசர் பெயராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையும் பயன்படுத்த இருக்கும் பாஸ்வேர்டையும் கொடுத்தால், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. பின் அதனைக் கிளிக் செய்து உறுதி செய்த பின், மீண்டும் ஏ–டிரைவ் தளம் சென்று, அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று பைல்களை அப்லோட் செய்வதும் மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதே போல சேவ் செய்த பைலையும், மீள எடுத்துப் பயன்படுத்தி வைக்கலாம். பேசிக், சிக்னேச்சர் மற்றும் பிரிமியம் என மூன்று வகை பைல் சேவ் வசதிகளை இந்த தளம் தருகிறது.
சிக்னேச்சர் என்ற கட்டணம் செலுத்திப் பெறும் வசதியிலும் 50 ஜிபி ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாகப் பல தொழில் நுட்ப வசதிகள் தரப்படுகின்றன. எப்.டி.பி. பைல் ட்ரான்ஸ்பர், எஸ்.எஸ்.எல். என்கிரிப்ஷன்,பைல் ரெகவரி, மற்றும் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான டெஸ்க் டாப் வசதிகள் தரப்பட்டுள்ளன.
பிரிமியம் ஸ்டோரேஜ் வசதி பெரும்பாலும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.100, 250, 500 ஜிபி மற்றும் 1 டெரா பைட் என்ற அளவில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அளவிற்கேற்றபடி கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தளம் தரும் வசதிகளில் ஆன்லைன் எடிட்டிங் வசதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இலவச ஸ்டோரேஜ் வசதி பெறுபவர்கள் கூட, ஆன்லைனிலேயே தங்கள் பைல்களை எடிட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து பின் திருத்த வேண்டியதில்லை.
பாதுகாப்பு, ரகசியம் என்ற அடிப்படையிலான பைல்களை இந்த ஆன்லைன் தள ஸ்டோரேஜ் வசதியில் வைத்திட விரும்பினால் கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறுங்கள். ஏனென்றால் இலவச ஸ்டோரேஜ் வசதியில் என்கிரிப்ஷன் வசதி தரப்படவில்லை.
அடுத்ததாக இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கான யூசர் இன்டர்பேஸ் வசதி மிக எளிமையாக இருப்பதனையும் குறிப்பிட வேண்டும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க் இடம் போதவில்லை என அங்கலாய்ப் பவர்களுக்கு இது ஒரு நல்ல தளமாகும் .
தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
1 கருத்துகள்
useful post, the site adrive has been working well, only thing it takes time to load even 10 mb files.
பதிலளிநீக்குbut definitely an useful website& facility.