
இந்த ரிப்போர்ட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சரி செய்திட டேட்டா கிடைக்கிறது. எந்த சூழ்நிலையில் அந்த புரோகிராம் கிராஷ் ஆனது; அதற்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று ஆய்வு செய்திட முடிகிறது.
ஆனால் சிலர் நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணி பெரும்பாலும் ரிப்போர்ட் அனுப்ப வேண்டாம் என்ற பட்டனையே அழுத்துகின்றனர். இதற்குக் காரணம், புரோகிராம் கிராஷ் ஆகிப் பிரச்னையில் இருக்கும் நமக்கு இதுவும் ஒரு தொல்லை என்று எண்ணுகின்றனர். அடுத்தபடியாக பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், எந்நேரமும் இன்டர்நெட் இணைப்பில் இருப்பதில்லை. எனவே ரிப்போர்ட் தயார் செய்தாலும் பலன் இல்லை. இதன் பின் இணைப்பு ஏற்படுத்தினால், ரிப்போர்ட் செல்லப்போவது இல்லை. எனவே இது போன்ற ரிப்போர்ட் தயாரிக்கும் வசதியை முடக்கினால் என்ன என்று எண்ணுகின்றனர்.

Control Panel ஐத் திறக்கவும்.
Preformance and Maintenance என்பதில் கிளிக் செய்திடவும்.
பின் System என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
இதற்குப் பிறகு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Advanced என்றடேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த விண்டோவின் கீழாக Error Reporting என்ற பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.
இதில் Disable error reporting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனிமேல் எந்த புரோகிராம் கிராஷ் ஆனாலும் எர்ரர் ரிப்போர்ட்டிங் அறிக்கை தயாரிக்கவா என்ற செய்தி கிடைக்காது.
1 கருத்துகள்
can
பதிலளிநீக்கு