
ஆனால் எத்தனை டேப்கள் திறக்கப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு ராம் மெமரி இடம் எடுக்கப்பட்டு காலியாகும். அண்மையில் பார்த்த டூ மெனி டேப்ஸ் (TooManyTabs) என்னும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு இந்த பிரச்னைக்கும் வழி காட்டுகிறது.
தொடர்ந்து பயனபடுத்தாத, ஆனால் தேவைப்படும் டேப்களை, காத்திருக்கும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வைக்கிறது இந்த புரோகிராம். அவை நம் கண்ணில் படும்படி இருக்கும். ஆனால் செயல்படும் நிலையில் இருக்காது. எனவே ராம் மெமரி காலியாகாது. இந்த ஆட் ஆன் தொகுப்பு வழக்கமான டேப்களுக்கு மேலாக ஒரு புதிய டூல்பாரினை உருவாக்குகிறது.

இதன் மீது கிளிக் செய்தால் அந்த டேப்பிற்கான தளம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இது போல ஆறு வரிசைகளில் இந்த டேப்களைக் கொண்டு சென்று வைக்கலாம். இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இது குறித்த சிறிய வீடியோ பைல் ஒன்றும் உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், இந்த ஆட் ஆன் தொகுப்பின் முழு பயன்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். இது இலவசம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
1 கருத்துகள்
இந்த Too many tabs இண்ட்ர்நெட் பிரவ்சரில் பயன் படுத்த முடியுமா?
பதிலளிநீக்கு