கம்ப்யூட்டர் பைல்கள், இணைய தளங்கள், இன்ஸ்டண்ட் மெசேஜ், சேட் விண்டோ, பிளாக் என்னும் வலை மனைகள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்கள் ஆகிய அனைத்திலும் தமிழில் எழுதக் கடந்த 25 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் முரசு அஞ்சல் தமிழ் செயலியின் பத்தாவது பதிப்பு சென்ற வாரம் வெளியிடப்பட்டது. இது முழுக்க யூனிகோட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ்7 வரை அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கக்கூடியது. இதில் உருவாக்கப்படும் பைல்களை பி.டி.எப். பைல்களாக மாற்றும் வசதி இதிலேயே தரப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த பதிப்பில் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் லிப்கோ ஆங்கிலம் தமிழ் அகராதியும் தரப்பட்டுள்ளது. பயன்படுத்துகையில் எந்த சொல்லுக்கும் தமிழில் பொருள் காணலாம்.
தமிழ்நெட் 99 கீ போர்டு விசுவலாகத் திரையில் காட்டப்படும். அதனைப் பார்த்து வழக்கமான கீ போர்டில் டைப் செய்திடலாம். முரசு அஞ்சல் தொகுப்பினை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதனை டவுண்லோட் செய்து இயக்க இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,200 செலுத்த வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு : இங்கே கிளிக் செய்யவும்

1 கருத்துகள்
:n
பதிலளிநீக்கு