ஆண்ட்டி வைரஸால் பாதிப்படைந்த கணனிகள்...!!!

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரித்து வழங்குவதில் முன்னணியில் இயங்கும் மெக் அபி அண்மையில் அப்டேட் வழங்கியதில், சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதன் அப்டேட் பைல் ஒன்று, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டங்களில் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது.

இதன் 'DAT' பைல் 5958 ரீபூட் லூப் ஒன்றை ஏற்படுத்தி, எக்ஸ்பி சிஸ்டங்களைத் தொடர்ந்து பூட் செய்திட வைத்தது. இதனால் நிறுவனங்களில், நெட்வொர்க்குகளில் இயங்கும் கம்ப்யூட்டர்களால், தங்களுக்குள் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை. இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கவில்லை. குறிப்பாக Svchost.exe என்ற பைல் பிரச்னைக்குள்ளாகியது. இதனை W32/Wecorl.a என்ற வைரஸ் பைல் என எடுத்துக் கொண்டு, அப்டேட் பைல் பல குழப்பத்தினை உருவாக்கியது.

பல ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிப்புக்கு உண்டான சில மணி நேரங்களில், இந்த பிரச்னையை மெக் அபி உணர்ந்து கொண்டு அதற்கான மாற்று தீர்வை தன் தளத்தில் வழங்கியது. அத்துடன் தன் நிறுவன சரித்திரத்தில் முதல் முதலாக தன்வாடிக்கையாளர்களிடம், பிழைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. சென்ற சில வாரங்களுக்கு முன், தங்களின் மெக் அபி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அப்டேட் செய்தவர்கள், அவர்கள் சிஸ்டங்களில் பிரச்னை ஏற்பட்டாலும், ஏற்படவில்லை என்றாலும், உடனடியாக மீண்டும் அப்டேட் செய்து கொள்வது நல்லது.

கருத்துரையிடுக

2 கருத்துகள்