மீண்டும் வந்த பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை

சென்ற வாரம் மீண்டும் ஒருமுறை பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது.

ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos) தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்