பிரவுசர்களுக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நாள்தோறும் உருவாக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இந்த பழக்கத்தினை, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொடங்கி வைக்க, இப்போது அனைத்து பிரவுசர்களுக்கும் கூடுதல் வசதி தரும் இந்த தொகுப்புகள் வெளியாகி வருகின்றன. அவற்றோடு இணைந்து ஆபத்துக்களும் வரத் தொடங்கி உள்ளன. ஆட் ஆன் தொகுப்பு என்ற பெயரில், நம் கம்ப்யூட்டரில் மறைந்திருந்து,பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் பதிக்கப்பட்டு, நம் தகவல்கள் திருடப்படுகின்றன. அல்லது நேரடியாக வைரஸ் புரோகிராம்கள் இந்த போர்வையில், கம்ப்யூட்டரில் இறங்கி, நம் செயல்பாட்டினை முடக்குகின்றன.இந்த சூழ்நிலையில் மொஸில்லா, கடந்த மே 11 அன்று, இந்த ஆட் ஆன் தொகுப்புகள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் நோக்கம் கொண்டவையா என்று அறிய ஓர் டூலினை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த டூலினை, மொஸில்லாவின் போட்டி பிரவுசர்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், சபாரி, ஆப்பரா போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
மற்ற பிரவுசர்களுக்கான ஆட் ஆன் ப்ளக் இன் புரோகிராம்கள் பலவற்றைச் சோதனை செய்திடும் இந்த டூல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பொறுத்தவரை, குறைந்த எண்ணிக்கையிலான ஆட் ஆன் புரோகிராம்களையே சோதனை செய்கிறது. ஏனென்றால், இதற்கான ஆட் ஆன் ப்ளக் இன்கள் ஒவ்வொன்றுக்கும் தனி குறியீடு எழுதப்பட வேண்டும் என்பதால், அனைத்திற்குமான சோதனை டூல் தர இயலவில்லை என்று மொஸில்லா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஜொனாதன் நைட்டிங்கேல் தெரிவித்தார்.
உங்கள் ஆட் ஆன்களை சோதனை செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
1 கருத்துகள்
Very well presented and the Tamil language translations are well worded as it pronounced same as in the English
பதிலளிநீக்கு