புதிய 'பிரவுசர் பிரேவ்'

'இன்டர்நெட்' உபயோகிப்பாளர்களின் தற்போதைய பெரும் கவலை பாதுகாப்பும், தனியுரிமையும் தான். இந்நிலையில், 'பிரேவ் சாப்ட்வேர்' நிறுவனம், புதிய இணைய உலவியை, 'பிரேவ்' எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரவுசரை, 'விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்.,' என அனைத்திலும் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். 

பிரேவ் பிரவுசரில் விளம்பரங்களை தடை செய்யும் வசதி அதனுடனேயே வருகிறது. மேலும், இணையதளங்கள் நம்மை பின்தொடர்வதை தடுக்கிறது.பயணர்களின் தரவுகளை சேமிப்பது, மூன்றாம் நபருக்கு விற்பது என எதுவும் செய்யப்படாது எனவும், பிரேவ் சாப்ட்வேர் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தவிர, வேகத்தைப் பொறுத்தவரையும் மூன்று முதல் ஆறு மடங்கு வரை, 'கூகுள் குரோம், மோசில்லா பயர்பாக்ஸ்' ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும் என்கிறது, பிரேவ் சாப்ட்வேர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்