தற்போது, 'ஐபோன் 12' மாடல் போன்கள், 'ஹாட்' ஆக இருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனம், அடுத்து, 'ஐபோன் 13' தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறது.
'ஐபோன் 13' அனேகமாக அடுத்த ஆண்டில் அறிமுகமாகிவிடும் என்கிறார்கள். மேலும், இந்த போனில், கேமரா மிகவும் மேம்பட்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், சந்தையில் அதிகமாக இருக்கிறது. அத்துடன் இதுவும் நான்கு மாடல்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் என நான்கு வகை போன்கள் அறிமுகம் ஆகலாம்.
இப்போதைக்கு, கேமரா குறித்த தகவல்கள் மட்டுமே கசிகின்றன.
0 கருத்துகள்