ஆப்பிள் 'ஏர்டேக்ஸ்' விரைவில் அறிமுகம்


'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஏர்டேக்ஸ்' விரைவில் அறிமுகமாகக்கூடும் என்று, சந்தை வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகிறது. 'ஏர்டேக்ஸ்' என்பது, சிறிய பட்டன் போன்ற சாதனமாகும். புளுடூத் இணைப்பில் செயல்படும் இதை வைத்து, தவறவிட்ட பொருட்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். 

கிட்டத்தட்ட சாவியை கண்டுபிடிக்க, லக்கேஜுகளை கண்டுபிடிக்க சந்தையில் இருக்கும் டைல், அடிரோ ஆகியவற்றுக்கு ஒப்பானதாக இருக்கும். இது ஆப்பிள் தயாரிப்பு என்பதால், ஐபோனுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மேலும் அதிக விதங்களில் பயன்படுத்த முடியும். ஏற்கனவே, இந்த ஏர்டேக்ஸ் குறித்து பல ஊக தகவல்கள் வந்துள்ளன. இது மேக்னடிக் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்றும், முழுக்க தண்ணீர்புகாத சாதனமாக இருக்கும் என்றும் தகவல்கள் முன்னரே வெளியாகி இருக்கின்றன. 

இப்போது, இந்த சாதனம், நவம்பரில் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்