தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்க ஒரு மென்பொருள்

இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில் அதில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் தகவலை ஒட்டி வீடியோ ஒன்றைப் பார்க்குமாறு செய்தி தரப்பட்டுள்ளது. உடனே தொடர்புடைய லிங்க்கில் கிளிக் செய்கிறீர்கள். பொறுமையைச் சோதிக்கும் வகையில் லோடிங் மெசேஜ் சுழன்று கொண்டே இருக்கிறது. இறுதியில் தளமும் திறக்கிறது. என்ன ஏமாற்றம்! அதில் இந்த வீடியோ உங்கள் நாட்டில் கிடைக்காது என்ற செய்தி வருகிறது. உங்கள் பொறுமையைச் சோதித்துவிட்டு இது போன்ற தகவல் வந்தால் எப்படி இருக்கும்?

இதனை எல்லாம் உடைக்க ஏதேனும் புரோகிராம் கிடையாதா? என்று ஓர் ஆதங்கம் வருமில்லையா? அந்த ஆதங்கத்தினைத் தீர்ப்பதற்காகவே Hotspot Shield என்று ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து விட்டால் இது போன்ற தடை செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். முதலில் இந்த புரோகிராமை இறக்கி இன்ஸ்டால் செய்திடவும்.

இதன் பின் Start, All Programs, Hotspot Shield என்று சென்று Hotspot Shield Launch என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவில் இந்த புரோகிராம் திறக்கப் படும்.இனி நீங்கள் பிரவுசர் செய்தால் தடை செய்யப்பட்ட வீடியோக்கள் கிடைக்கும். இந்த வசதி தேவை இல்லை என்றால் Disconnect என்ற பட்டனில் கிளிக் செய்துவிடலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. கார்திக் நான் இந்த புரோகிராமை உபயோகிக்கும் போது எந்த வலைதளத்திர்க்கு போனாலும் இடை இடையே anchor free என்ர
    வலை ரொம்ப தொந்தரவு செய்கிரது அதர்க்கு என்ன செய்வது என்ரு தெரியபடுத்தவும் நன்ரி
    nizamroja01@yahoo.com

    பதிலளிநீக்கு