உலகின் முதல் ஏ.சி.கடற்கரை


உலகிலேயே முதல் குளிரூட்டப்பட்ட கடற்கரை வசதி, துபாயில் ஏற்படுத்தப்படுகிறது.

சர்வதேச நிதி நெருக்கடியின் ஒரு சிறுதுளி பாதிப்புகூட இல்லாத நாடாக சவுதி அரேபியா இருக்கிறது. அங்கு பிரம்மாண்ட கடல் அருங்காட்சியகத்துடன் மிகப் பெரிய ஷாப்பிங் மால் சமீபத்தில் திறக்கப்பட்டது. செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிலையில், பலேசோ வெர்சாஸ் ஓட்டல் அருகே கடற்கரை மணலுக்கு அடியில் பைப்கள் மூலம் ஏர் கண்டிஷனர் வசதி செய்யப்படுகிறது. அதன் மூலம் கோடைக் காலத்தில் மணலின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு பட்டப்பகல் 12 மணிக்கு கூட கடற்கரையில் காலாற நடை போடலாம்.

அங்கு கோடையில் வெயில் 50 டிகிரிக்கு கொளுத்தும். ஆனால், பலேசோ வெர்சாஸ் ஓட்டலைச் சுற்றிய மணல் பகுதிகள் Ôஜில்Õலென்று இருக்கும். இந்த வசதி அடுத்த ஆண்டோ 2010ம் ஆண்டோ நடைமுறைக்கு வரும் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், உலகின் முதல் ஏசி கடற்கரையை துபாய் பெறுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சுற்றுலாப் பயணிகள் குவியும் துபாயில், சுற்றுலா வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
குளிரூட்டப்பட்ட கடற்கரை மூலம் கோடையில் பயணிகள் வருவாய் அதிகரித்து பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என துபாய் அரசு எதிர்பார்க்கிறது.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. THESE ARE ALL IN DUBAI WHICH BELONGS TO UNITED ARAB EMIRATES THEN WHY YOU MENTION SAUDI ARABIA'S NAME WHILE YOU DESCRIBIBG ALL THE DETAIL ABOUT DUBAI.

    பதிலளிநீக்கு
  2. என்னது நிதிநெருக்கடி பிரச்சனையில்லையா?
    பல ஊழியர்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவது எதனால்?

    பதிலளிநீக்கு
  3. saudi and dubai difrent country thenmozi...dubai also going very bad condition more pepole back home country

    பதிலளிநீக்கு