புதுசா ஈ-மெயில் கணக்கு ஆரம்பிக்கிறீங்களா....?

இணையத்தில் உலா வருபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ஈ-மெயில் கணக்கு வைத்திருப்பார்கள். ஈ-மெயில் முகவரி தரும் இணையதளங்கள் பல காணப்படுகின்றன. அப்படி புதிதாக மிகவும் பாதுகாப்பான ஈ-மெயில் தளம் ஒன்று ஆரம்பிக்கபட்டிருக்கிறது.


GMX Mail என அழைக்கப்படும் இந்த இமெயில் தளம் மிகவும் பாதுகாப்பானது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடி கட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையதளம் வழியாக மட்டுமின்றி பி.ஓ.பி. அல்லது ஐ மேப் வழியாகவும் உங்கள் இமெயில்களைக் கையாளலாம்.

ஆன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களைக் காத்து வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது. மெசேஜ்கள் 50 எம் பி வரை அனுமதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எக்ஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட்மெயில் உட்பட) இமெயில்களைப் பெறலாம். அனைத்து மெயில்களும் ஸ்பாம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில் கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால் இன் பாக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களைப் பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு. அட்ரஸ்புக்குடன் காலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ் மெயில் பாக்ஸில் உண்டு. மெயில்களைப் பிரித்து வைக்க போல்டர் வசதியும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் எந்த போல்டரிலிருந்தும் மெயில்களை அழிக்கலாம்.

தற்போது இந்த இமெயில் சேவையினை உலக அளவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக இமெயில் பயன்படுத்த விரும்புபவர்களும், புதிய இமெயில் சேவை ஒன்றைக் கூடுதலாகப் பயன்படுத்த திட்டமிடுபவர்களும் இந்த சேவையினைப் பெறலாம். எந்தக் கட்டணமும் இதற்குக் கிடையாது.

இதுதான் அந்த தளம் GMX Mail நீங்களும் சென்று பாருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்