பிளாக்கர் பதிவர்களுக்கு:ஜி-மெயில் , கூகிள் கணக்கு பாதுகாப்பு செயல்முறை.


பிளாக்கர் வலைப்பூக்கள் திருடப்படுவது தமிழ் வலைப்பதிவுகள் வரை வந்த்துவிட்டது . எனவே உங்கள் ஈ-மெயில் கணக்குகளையும் கூகிள் கணக்குகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியமாகும்.

கூகிள் கணக்கு அல்லது ஜி-மெயில் பயன்படுத்துபவர்கள் கீழே கூறப்பட்ட பாதுகாப்பு செயல்முறைகளை செய்து கொள்ளுங்கள் .இதன்மூலம் உங்ககள் கூகிள் கணக்கு திருடப்படுவதை கூடியளவு தவிர்த்துக் கொள்ளலாம்.

ஜிமெயில் பயனர்கள் அனைவரும் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய அமைப்பு(செட்டிங்) இது. இதனால் உங்கள் ஜிமெயில் பாதுகாப்பாக இருக்கும். அனைவருக்கும் http://-க்கும் https://-க்கும் வேறுபாடு அறிந்திருப்பீர்கள்.
https:// என்பது உங்கள் "பாஸ்வேர்ட்" போன்ற முக்கியமான தகவல்களை மிக பாதுகாப்பான முறையில் என்கோட் செய்து இணையத்தில் அனுப்பும் முறை ஆகும். பொதுவாக ஜிமெயில் http://mail.google.com என்றே திறக்கும். அதை https://mail.google.com என மாற்ற, கீழே குறிப்பிட்டது போல் செய்யவும்.

1. உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையவும்.

2. செட்டிங்ஸ் (அமைப்புகள்) பக்கத்திற்குச் செல்லவும். அந்த பக்கத்தின் கடைசியில் "Browser Connection" (உலாவி இணைப்பு) என்று இருக்கும். அதில் "Always Use https://" என்பதைத் தேர்ந்து எடுத்தால், இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையும் போது, https:// என மாறிவிடும். ஆகையால், உங்கள் ஜிமெயில் மிக பாதுகாப்பாக மாறிவிடும்.


கீழே படம் தெளிவிலாமல் இருந்ததால் படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

ஆங்கிலத்தில் ஜிமெயில் பயன்படுத்துவேருக்கு:


தமிழில் ஜிமெயில் பயன்படுத்துவேருக்கு:


கவனிக்கவும்:

"எப்போதுமே https:// யைப் பயன்படுத்துங்கள்" என்பதற்குப் பதிலாக "எப்போதுமே https:// யைப் பயன்படுத்துங்கள்" என பிழையாக இருக்கிறது. இருப்பினும் முதல், விருப்பத்தையே தேர்ந்து எடுக்கவும்.

மேலே படத்தில் காட்டப்பட்டவாறு செய்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. அதெல்லாம் சரி
    முதல்ல வேர்டு வெரிபிகேசனை தூக்குங்க!
    பின்னூட்டம் போட தாவூ தீருது!

    பதிலளிநீக்கு
  2. @ வால்பையன்

    தூக்கியாச்சு...தமிழ் வலைப்பதிவர்கல் ஸ்பாம் அனுப்பமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தூக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. HTTP யில் இருந்தா மட்டும் எப்படி திருடரானுங்க இந்த திருட்டு பயலுங்க?
    நேத்து கூட ஒன்னு அப்படி பார்த்தேன்...திருடிவிட்டு பிளாக் ஓனருக்கே சவால் விடறானுங்க!

    பதிலளிநீக்கு
  4. @ ஜுர்கேன் க்ருகேர்

    HTTP க்கும் HTTPS க்கும் உள்ள வித்தியாசம்.
    தமிழில் மொழிபெயர்க்க நேரமில்லாத்தால் ஆங்கிலத்திலேயெ தருகிறேன்.

    HTTP is Hyper Text Transport Protocol and is transmitted over the wire via PORT 80(TCP). You normally use HTTP when you are browsing the web, its not secure, so someone can eavesdrop on the conversation between your computer and the web server.

    HTTPS (Hypertext Transfer Protocol over Secure Socket Layer, or HTTP over SSL) is a Web protocol developed by Netscape and built into its browser that encrypts and decrypts user page requests as well as the pages that are returned by the Web server. HTTPS is really just the use of Netscape's Secure Socket Layer (SSL) as a sublayer under its regular HTTP application layering. (HTTPS uses port 443 instead of HTTP port 80 in its interactions with the lower layer, TCP/IP.) SSL uses a 40-bit key size for the RC4 stream encryption algorithm,new-age browsers use 128-bit key size which is more secure than the former, it is considered an adequate degree of encryption for commercial exchange.HTTPS is normally used in login pages, shopping/commercial sites.

    Although it may be encrypted does not mean its safe, there are tools out there to decrypt the information being sent over the wire, although its more difficult to do so.

    பதிலளிநீக்கு
  5. உங்க தகவலுக்கு மிக்க நன்றி.

    ஆனா என்னோட பதிவையெல்லாம் யாரும் சீண்டக்கூட மாட்டாங்க. அதனால நான் இதப்பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. :)

    பதிலளிநீக்கு