
இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும் புரோகிராம்கள் மீண்டும் ஓரளவிற்குத் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது விரைவாக நடக்கிறது. எனவே இந்த டிபிராக் செயல்பாட்டினை நாம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு முறை டிபிராக் செய்திட கம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்கும். அந்நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.
இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படாமல், பைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில், பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் எப்படி இருக்கும். முதலில் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக் உடனுடக்குடன் செய்யப்படுவதால் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்குவது வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.

பின் மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது. இதனால் நாம் கம்ப்யூட்டரை டிபிராக் செய்வது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச் செய்துவிட்டு நம் இஷ்டப்படி கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருக்கலாம். நம் சிஸ்டமும் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும் விரைவாகவும் எளிதாகவும் இயங்கும்.
இந்த மென்பொருளை இலவசமாக டவுண்லோட் செய்ய இங்கே கிளிக்செய்யுங்கள்
5 கருத்துகள்
THANKS
பதிலளிநீக்குdear anna...
பதிலளிநீக்குthanks keep going .......
my dear anna...
பதிலளிநீக்குthank you for giving information to us. this software is always very useful to all ...
once again thank you keep going
@ ஜுர்கேன் க்ருகேர்.....
பதிலளிநீக்கு@ Prabu
*+*தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி*+*
தொடர்ந்து பல பயனுள்ள இலவச மென்பொருளையும், பல பயனுள்ள பதிவுகளையும் தருகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.
பதிலளிநீக்கு