கூகிள் கணக்கீடுகள் (Google Analytics) என்றால் என்ன...?

Google Analytics

Google Analytics என்றால் என்ன? அதை எப்படி செயற்படுத்துவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்காகவே இந்த பதிவு. Google Analytics இணையதளத்தின் வெற்றியை அளவிட பயன்படும் மிகச்சிறந்த கருவியாகும். உங்களுடைய விற்பனை உத்திகளையும், பொருட்களையும், சேவைகளையும் கணிக்க உதவும் கருவியே இந்த Google Analytics. 

எதற்கு கணக்கீடுகள்? 

90- களில் வலைதள பார்வை எண்கள் (Web counter) பயன்படுத்தப்பட்டன. இவை எத்தனை பேர் பார்வையிட்டனர் என்ற தகவலை எல்லோருக்கும் தெரிவித்ததோடு பார்பதற்கும் அழகாக இருக்கவில்லை. மேலும் எண்ணிக்கைகள் எந்தவிதமான புள்ளியியல் கணக்கீட்டுக்கும் பய ன்படவில்லை. ஆனால் (Google கணக்கீடுகள்) ஏராளமான தகவல்களை அளிக்கின்றது. நாம் இம்மாதிரியான கணக்கீட்டு தகவல்களை பயன்படுத்துவதின் மூலம் நமது இணையதளத்தின் வளர்ச்சியை றிந்துகொள்ள இயலுவதோடு, வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளையும் எடுக்க ஏதுவாகிறது. 

என்ன மாதிரியான தகவல்களை பெறலாம்? 

•  மொத்த பார்வையாளர்கள் எத்தனை பேர்? 
•  புதியவர்கள் எத்தனை பேர்? 
•  மீண்டும் வந்தவர்கள் எத்தனை பேர்? 
•  எவ்வளவு நேரம் செலவழித்தார்கள்? 
•  எந்தப் பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது? 
•  எங்கிருந்து வந்தார்கள்? 
•  இருப்பிடம் எது? 
•  எந்தெந்த தேதியில் வந்தார்கள்?
•  எப்படி உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொண்டார்கள்? 
உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொள்ள தேடுபொறியில் பயன்படுத்தப் பட்ட வார்த்தைகள் என்னென்ன?

இப்படி ஏராளமான புள்ளியியல் தகவல்களை நமக்கு அளிக்கின்றது. இத்தகவல்களின் அடிப்படையில் நாம் பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உதாரணமாக, ஒரு செய்தி நிறுவன இணையதளத்தில் விளையாட்டு சம்மந்தமான பக்கங்கள் திகமாக பார்க்கப்படுகிறது எனில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக செய்திகளை வெளியிடலாம். குறிப்பிட்ட நாட்டினர் அதிகம் பார்க்கிறார்கள் எனி ல், அந்நாட்டுச் செய்திகளை அதிகம் வெளியிடலாம். பார்வையாளர்கள் மிகக் குறைந்த நேரத்தில் வெளியேறிவிடுகின்றனர் எனில், எந்த பக்கங்களிலிருந்து வெளியேறுகின்றனர் என்பதை அறிவதன் மூலம், அப்பக்கங்களை மறுஆய்வு, மறுமதிப்பீடு செய்து அதற்கான காரணங்களை கண்டறியலாம். ஒவ்வொரு நாளின் வளர்ச்சியை அளவிடுவதன் மூலமே, நாம் இணைய உலகில் ஜொலிக்க முடியும். 

முழுக்க முழுக்க இலவசமாக வெளியிடப்படும் இச்சேவையை பெறுவதற்கு தங்களுக்கு Google-ல் கணக்கு (Account) இருக்க வேண்டும். அதாவதுGmail-ல் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்க வேண்டும். முகப்பு பக்கத்தில், Gmail-பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை அளித்து உள்ளே செல்லவும். Sign-up பக்கம் தோன்றும்.

இதில் உங்கள் இணையதளம் அல்லது வலைப்பூவினை பற்றிய தகவல்களை அளித்தவுடன் சில வரிசைகளைக் கொண்ட நிரல் (Program Code) அளிக்கப்படும். அதனை நகலெடுத்துக் கொண்டு, நம் இணையபக்கத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒட்டிவிட வேண்டும் . வலைப்பூவில் Edit Html பகுதிக்கு சென்று </body> என்ற கோடுக்கு முன்னர் ஒட்ட வேண்டும்.

ஒட்டிய 48 மணிநேரத்திற்கு பின்பாகவோ அல்லது சிறிது முன்பாகவோ நமக்கு தகவல்கள் அளிக்கத் தொடங்கிவிடும். இதற்கு முன் Google அளித்த நிரலை சரியாக ஒட்டியிருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தகவல்கள் பெறப்படுகின்றன” (Receving data) என்ற செய்தி நம் இணையதளம் தொடர்பான செய்திகள் பெறப்படுகின்றன என்பதை உறுதி செய்கிறது. புள்ளியியல் கணக்கீடுகள் தற்போது கைவர ஆரம்பிக்கிறது. இங்கே Google Analytics சென்று உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    பதிலளிநீக்கு
  2. ஓ! இது தானா? பலர் பதிவுகளில் பார்த்திருந்தாலும் முயன்றதில்லை.
    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உங்க தளம் அருமை.கார்த்திக்.தொடரட்டும்.
    தமிழினி ஏன் சூரியன் எப்.எம் ரேடியோ வரவில்லை. சூரியன் எப்.எம்.சென்னை கேட்ககூடியவாறு செய்தால் மிக நன்றாக இருக்கும் செய்வீர்களா.

    பதிலளிநீக்கு