
இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, ""நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க'' என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.


தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
1 கருத்துகள்
உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!. நன்றி
பதிலளிநீக்கு